Advertisment

தல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்...

தல அஜித்துக்கு பாடியது சந்தோஷம் : ஷங்கர் மகாதேவன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
shankar mahadevan about vetti kattu song, ஷங்கர் மஹாதேவன்

shankar mahadevan about vetti kattu song, ஷங்கர் மஹாதேவன்

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற வேட்டி கட்டு பாடலை பாடிய பிரபல பாடகர் ஷங்கர் மஹாதேவன் அஜித் குறித்து சுவாரஸ்யமான தகவலோடு வீடியோ பதிவிட்டுள்ளார்.

Advertisment

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கைகோர்த்துள்ள அஜித் விஸ்வாசம் படத்தில் இரண்டு கேரக்ட்டரில் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித்திற்கு நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள்.

விஸ்வாசம் வேட்டி கட்டு பாடல் பற்றி ஷங்கர் மஹாதேவன் வீடியோ

விஸ்வாசம் படத்தின் முதல் பாடலான அடிச்சு தூக்கு இணையத்தை கலக்கி வரும் நிலையில், சமீபத்தில் வெளிவந்த வேட்டி கட்டு பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல பாடகர் ஷங்கர் மஹாதேவன் இப்பாடலை பாடியுள்ளார். தற்போது இதுகுறித்து வீடியோ பதிவை அவர் வெளியிட்டார்.

அதில் அவர் பேசியதாவது , தல அஜித்திற்கு பாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும், இப்பாடல் அமைய காரணமாய் இருந்த இசையமைப்பாளர் இமானுக்கு நன்றியை கூறி நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் பாடகர் ஷங்கர் மஹாதேவன்.

Viswasam Album : விஸ்வாசம் பாடல்கள் வெளியானது... மாஸ் தீம் வேற லெவல்

Tamil Cinema Thala Ajith Singer Shankar Mahadevan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment