தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஷங்கர். இவர் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்றவர். இவரது படங்கள் எப்போதும் புதுவிதமாகவும், பிரம்மாண்டமாகவும் எடுக்கப்படும். அவர் இயக்கிய எந்திரன், அந்தியன், 2.0, இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது, கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படத்தை இயக்கியுள்ளார். கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் கடந்த 12-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஷங்கரிடம் 'அதிதி ஷங்கரை எப்போது உங்களுடைய படத்தில் பார்க்கலாம்' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷங்கர் "அவருக்கென்றே ஒரு கதாபாத்திரம் ரெடியாக உள்ளது. ஒரு தந்தையாக இல்லாமல், இயக்குனராக அதிதியிடம் நடிகைக்கான அம்சங்கள் இருக்கின்றன என்பதை அறிந்துள்ளேன். ஆகையால், நிச்சயமாக விரைவில் என்னுடைய படத்தில் அவரை பார்க்கலாம்" எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“