Advertisment

Vijay - Vikaram: ஷங்கர்-விஜய்-விக்ரம் காம்போ! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Vijay - Vikaram: ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்டிடம் அவர் பேசிக் கொண்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
May 01, 2019 14:21 IST
Shankar's next with Thalapathy Vijay and Chiyaan Vikram

Vijay - Vikaram: நடிகர் விஜய்யும் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்.

Advertisment

இவர்கள் இணைந்து ஒரு படம் நடிகக வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமும், எதிர்பார்ப்பும்.

இந்நிலையில், 2.0 திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் ஷங்கர், இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் கமலின் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல காரணங்களால் அதன் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லையாம். ஆகையால் இந்தியன் 2-விற்கு முன்பு வேறு ஒரு படத்தையும் இயக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர்.

தற்போது இதற்காக ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்டிடம் அவர் பேசிக் கொண்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஹீரோ கதையான அந்தப் படத்தில், விஜய்யும் விக்ரமும் இணைந்து நடிக்கிறார்களாம்.

இந்த மேஜிக்கல் காம்போ, நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும் என்கிறார்கள் நம்பத் தகுந்த வட்டாரத்தினர்.

இதற்கிடையே விஜய் தற்போது தளபதி 63-யிலும், விக்ரம் கடாரம் கொண்டானிலும் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

 

#Chiyaan #Thalapathy Vijay #Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment