நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள மாஸ் டான்ஸ் பாடலனா வாத்தி கமிங் பாடலுக்கு நடிகர் ஷாந்தனு மற்றும் குழுவினர் மாஸாக ஒரு டான்ஸ் ஆடி மற்றவர்களும் இது போல டான்ஸ் முயற்சி செய்து பதிவிடுமாறு கிகி டான்ஸ் சவால் விடுத்துள்ளார்.
கிகி சேலஞ்ச் என்பது ஒருவர் ஏதேனும் வேடிக்கையாக ஒன்றை செய்து அதைப் போல மற்றவர்களையும் செய்யத் தூண்டுவதற்கு சவால் விடுவதைத் தான் கிகி சவால் என்று கூறுகின்றனர்.
இதற்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒருவர் குளிர்ந்த நீரை தலையில் ஊற்றிகொள்வது, சேற்றில் இறங்கி குதிப்பது போன்ற கிகி சவால்கள் பரவலானது.
அந்த வகையில், விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்திருக்கும் நடிகர் ஷாந்தனு மாஸ்டர் படத்துக்கு புரமோஷன் செய்யும் வகையில், வாத்தி கமிங் பாடலுக்கு குழுவினருடன் டான்ஸ் ஆடி கிகி டான்ஸ்க்கு சவால் விடுத்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடலுக்கு விஜய் போலவே டான்ஸ் ஆடியுள்ள ஷாந்தனுவின் டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி, வாத்தி கமிங் பாடல் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வரவேற்பைப் பெற்றது. மாஸ்டர் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். தற்போது படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"