/tamil-ie/media/media_files/uploads/2019/11/Ayutha-Ezhuthu-serial.jpg)
Ayutha Ezhuthu serial
Ayudha Ezhuthu Serial: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘ஆயுத எழுத்து’. இதில் ஸ்ரீத்து கிருஷ்ணன், அம்ஜத் கான் ஆகியோருக்கு பதிலாக சரண்யா மற்றும் ஆனந்த் நடிக்கிறார்கள். இந்த செய்தியை சீரியலை ஒளிபரப்பும் சேனலான விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியுள்ளது.
ஆயுத எழுத்து சீரியல் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ’ஜோடி’ மற்றும் ’கல்யாணம் கல்யாணம்’ புகழ் ஸ்ரீத்து கிருஷ்ணன் சப் கலெக்டர் இந்திராவாக முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அறிமுக நடிகர் அம்ஜத் கான், சக்திவேல் என்ற முன்னணி ஆண் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இந்நிலையில் அம்ஜத் கான் தனிப்பட்ட காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். ஸ்ரீத்து மாற்றப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
விரைவில்.. இந்திராவாக.. ❤❤ #AayudhaEzhuthu#VijayTelevisionpic.twitter.com/glW20I8cz5
— Vijay Television (@vijaytelevision) November 6, 2019
ஆகையால், சரண்யா சுந்தராஜ் மற்றும் ஆனந்த், இந்திரா மற்றும் சக்திவேல் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் ஆயுத எழுத்து சீரியல் 100-வது எபிசோடை கடக்கவிருக்கிறது. இந்த சீரியல் மூலம் ஆனந்த் சின்னத்திரையில் அறிமுகமாகிறார். இதற்கு முன்பு, அவர் ஒரு சில குறும்படங்கள் மற்றும் வெப் சிரீஸ்களில் நடித்துள்ளார்.
சரண்யா சுந்தராஜ் தற்போது ரன் (திவ்யாவாக) சீரியலில் நடித்து வருகிறார். அதோடு மகாபாரதம் (பாலியாக), நெஞ்சம் மறப்பதில்லை (சரண்யா விக்ரமாக), தெலுங்கு சீரியல் ’ரோஜா’ போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர். தவிர ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.