அன்னபூரணியாக களத்தில் நிற்கும் சீரியல் நடிகை: குவியும் வாழ்த்து
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் காலத்தில், லாக்டவுனில் உணவில்லாமல் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிப்பதற்காக அன்னபூரணியாக களம் இறங்கியிருக்கும் சீரியல் நடிகை சரண்யா துராடிக்கு ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் காலத்தில், லாக்டவுனில் உணவில்லாமல் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிப்பதற்காக அன்னபூரணியாக களம் இறங்கியிருக்கும் சீரியல் நடிகை சரண்யா துராடிக்கு ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா லாக்டவுனில் வருமானம் இல்லாமல் உணவின்றித் தவிப்பவர்களுக்கு நடிகை சரண்யா துராடி அன்னபூரணியாக களத்தில் இறங்கி உணவு வழங்கி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக, தமிழகத்தில் தினசரி 33 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. தினசரி 300க்கு மேல் கொரோனா மரணங்கள் பதிவாகி வருகிறது. மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடுமையாக இருப்பதால் தமிழக அரசு மாநிலம் முழுவது லாக்டவுன் அறிவித்துள்ளது. லாக்டவுனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலர் வருமானம் இல்லாமல் உணவு இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உணவு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பலரும் அதனை பெற முடியாதவர்களாக உள்ளனர்.
இந்த சூழலில், பிரபல சீரியல் நடிகை சரண்யா துராடி, லாக்டவுனில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவை தானே காரில் எடுத்துச் சென்று வழங்கி வருகிறார்.
Advertisment
Advertisements
சரண்யா துராடி கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவர் இதுவரை எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தனது வயதான பெற்றோர்களுக்கு வீட்டிலேயே இருந்து புத்தகம் எழுதி வந்தார். ஆனால், அவர் கொரோனா 2வது அலையால் தொற்று பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில், அவரே களம் இறங்கி உணவில்லாதவர்களுக்கு உணவு அளித்து வருகிறார்.
சென்னையில் பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள் மட்டுமில்லாமல் கொரோனா நோயாளிகள், வயதானவர்கள் என பலரும் உணவில்லாமல் தவிப்பதாக சரண்யா துராடி கூறுகிறார். இது குறிது சரண்யா துராடி குறிப்பிடுகையில், ஒரு பெண் தனது குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். அதனால், அனைவருக்கும் உணவு வழங்க முடியுமா என்று கேட்டார். அதற்குப் பிறகுதான், சரண்யா துராடி Shore Women Society என்ற ஒரு அமைப்பை தொடங்கி மக்களுக்கு உணவளிக்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
சரண்யா துராடி தினமும் 50 பேருக்கு மேல் உணவு வழங்கி வருகிறார். அது மட்டுமில்லாமல், உணவு வழங்கியபோது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து சரண்யா துராடி, “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன்.
லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன்.
இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது. ஆனால், பசித்த முகத்தில் தெரியும் நன்றியும் அன்புமே இந்த கடினமான சூழலை கடக்க உதவுகிறது.
நல் உள்ளங்கள் சிலர் தங்களால் ஆன நிதி அனுப்பி உணவளிக்கும் என் கரங்களுக்கு வலு சேர்த்து இருக்கிறீர்கள். அத்தனை பேருக்கும் என் மரியாதையும் பேரன்பும். தொடர்ந்து பசியாற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் காலத்தில், லாக்டவுனில் உணவில்லாமல் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிப்பதற்காக அன்னபூரணியாக களம் இறங்கியிருக்கும் சீரியல் நடிகை சரண்யா துராடிக்கு ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"