![Sharmila Thagore](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/12/17/UNBf50lVjYmJkJk1DbCw.jpg)
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சமீபத்தில் தொடங்கிய ஸ்க்ரீன் இதழின் வெளியீட்டை மும்பையில் நடத்திய நிலையில். இந்த பத்திரிக்கையின் 4-வது எடிஷன் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பங்கேற்ற பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர், தனது 65 ஆண்டுகால சினிமா அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Read In English: Sharmila Tagore speaks about her illustrious career in fourth edition of SCREEN Live
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பொழுதுபோக்கு இதழான ஸ்க்ரீன் இதழை (SCREEN) கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி மீண்டும் தொடங்கியது. கந்த1951 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மிகவும் நம்பகமான திரைப்பட பத்திரிகையாக திகழ்ந்த ஸ்க்ரீன் இதழ், ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் அறிமுக விழாவில், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தொடங்கி வைத்தார்.
ஸ்க்ரீன் இதழின் அறிமுக விழா மும்பையில் நடைபெற்ற நிலையில், தற்போது இதன் 4-வது பதிப்பு தொடர்பான நிகழ்ச்சி, டெல்லியில் நடைபெற்றது. ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர் தனது 65 ஆண்டுகால சினிமா அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும் ஸ்க்ரீன் லைவ்வில் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் இதுவரை சொல்லப்படாத தகவல்களை வெளிப்படுத்தினார்.
ஸ்க்ரீன இதழின் முந்தைய நிகழ்ச்சி, மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் ஸ்க்ரீன் நிகழ்வு நடத்துவது இதுவே முதல்முறையாகும். இந்த மறக்கமுடியாத நிகழ்வை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் பகிரப்பட வேண்டும் என்பதை கூட்டத்தில் இருந்து தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந் ஸ்க்ரீன் இதழை உங்கள் திரைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்று இரவு 8 மணிக்கு ஸ்க்ரீன் இதழின் விழா, யூடியூப் சேனல்களில் பார்க்க முடியும். லென்ஸ்கார்ட் வித் க்ராசரி பார்ட்னர், மில்க்பாஸ்கெட் மற்றும் பேஷன் பார்ட்னர் மிராவ் ஆகியோருடன் ஸ்கிரீன் லைவ் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில், விண்ணை முட்டும் நட்சத்திரக் கட்டணங்கள் மற்றும் பரிவாரங்களின் அதிகரித்து வரும் செலவுகள் பற்றிய தனது கவலைகளைப் பற்றி ஷர்மிளா பேசினார். பிக்-டிக்கெட் படங்கள் எப்படி உயர்வாக மாறுகின்றன என்பதையும், நடிகர்கள் தங்கள் சொந்தக் நிலைகளில், மூழ்கி, யதார்த்தத்திலிருந்து மேலும் நகர்ந்து வெளியில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான சத்யஜித் ரேயுடன் பணிபுரிந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட ஷர்மிளா அவருடன் செலவழித்த நேரம், சினிமா மற்றும் வாழ்க்கை இரண்டையும் பற்றிய தனது புரிதலை எவ்வாறு ஆழப்படுத்தியது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும் அவர் தணிக்கை குழுவின் தலைவராக தனது பதவிக்காலம் மற்றும் தணிக்கை பற்றிய தனது கருத்துக்களைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
ஸ்க்ரீன் இதழின் முதல் பதிப்பில் அட்டையில் ஷ்ரத்தா கபூர் இடம் பெற்றிருந்தார். இந்த நிகழ்வில், விஜய் வர்மா மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். ஸ்க்ரீன் லைவ்வின் இரண்டாம் பதிப்பில், நடிகர்கள் தமன்னா பாட்டியா, ஜிம்மி ஷெர்கில் மற்றும் அவினாஷ் திவாரி ஆகியோர் திரையுலகில் தங்களின் பயணத்தைப் பற்றி பேசினர். ஸ்க்ரீனின் மூன்றாவது பதிப்பில், தியோல் சகோதரர்களான சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் ஆகியோர் தங்கள் தொழில் வாழ்க்கையைப் பற்றியும், திரைப்படங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.