/indian-express-tamil/media/media_files/2025/08/08/jovika-vanitha-2025-08-08-09-27-09.jpg)
இளையராஜா மோதுவது வனிதா கூட இல்ல; அந்த சின்ன பொண்ணு கூடதான்: பிரச்னை முடிஞ்சு போச்சு; பிரபல நடிகை ஓபன் டாக்!
இசைஞானி இளையராஜா-நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோருக்கு இடையேயான காப்புரிமை சர்ச்சை பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை ஷர்மிளா, புதிய சிந்தனை யூடியூப் சேனலில் நடத்தப்பட்ட நேர்காணலில் வனிதாவுக்கு ஆதரவாக பேசிய கருத்துகள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.
ஷர்மிளா தனது பேட்டியில், வனிதா இளையராஜாவை தந்தை ஸ்தானத்தில் மதித்ததாகவும், தனது இயக்கத்தில் உருவாகும் முதல் படமான Mrs. and Mrs.-க்கு வாழ்த்து பெறவே அவரைச் சந்தித்ததாகவும் கூறினார். அப்போது, தனது பாடல்களை வனிதா பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா சொல்லியிருந்தால், இந்தச் சர்ச்சை எழுந்திருக்காது என்று ஷர்மிளா கூறினார். ஆனால், படம் வெளியான பிறகு இளையராஜா புகார் கூறியது நியாயமில்லை என்று அவர் விமர்சித்தார்.
இளையராஜாவின் பாடல்களுக்கு உரிமை பெற்ற சோனி மியூசிக் நிறுவனத்திடம் வனிதா அனுமதி வாங்கியதாகவும், ஆனால் அந்த உரிமைகள் தன்னிடம் மட்டுமே உள்ளதாக இளையராஜா தரப்பு கூறியதாகவும் ஷர்மிளா சுட்டிக்காட்டினார். இதனால், நடுவில் சிக்கிக்கொண்ட வனிதா, மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார். வனிதா கோடீஸ்வரி அல்ல என்றும், தனது மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து, கடன்களையும் வாங்கித்தான் இந்தப் படத்தை எடுத்தார் என்றும் ஷர்மிளா குறிப்பிட்டார். பெரிய பட்ஜெட் படங்களுக்கு எதிராக பேசாத இளையராஜா, ஒரு பெண்ணும் அவரது மகளும் எடுத்த சிறிய படத்துக்கு எதிராகப் போராடுவது எந்த விதத்தில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இளையராஜாவின் இந்த நடவடிக்கைகள், அவருக்கு "பண ஆசை" என்ற பெயரை ஏற்படுத்தியுள்ளது என்று ஷர்மிளா கூறினார். இதன் காரணமாக, பல இளம் இயக்குநர்கள் அவரது பாடல்களைத் தங்கள் படங்களில் பயன்படுத்தத் தயங்குவதாகவும், இது திரையுலகில் அவரது மரியாதையைக் குறைப்பதாகவும் ஷர்மிளா ஆதங்கப்பட்டார். இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் முதலில் "இளையராஜாவுக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருந்ததாகவும், சர்ச்சை காரணமாகவே அதை நீக்கியதாகவும் ஷர்மிளா தெரிவித்தார். இதன் மூலம், இளையராஜா மீது வனிதா வைத்திருந்த மரியாதை தெளிவாகிறது. மேலும், அவர் பேசுகையில், திரைப்படத் துறையில் பெண்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளதால், அவர்களை ஆதரிக்க வேண்டியது அவசியம் என்றும் ஷர்மிளா தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.