Tamil-cinema-news: நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த 'ஆறாது சினம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இவர் தொடர்ந்து டூ லெட், மண்டேலா, திரௌபதி, பிச்சைக்காரன் 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் பல படங்களிலும் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற நடிகையாக வலம் வரும் ஷீலா ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் திரைப்பட உதவி இயக்குனர் தம்பி சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடலுக்கு நடுவில் வித்தியாசமான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நடிகை ஷீலா ராஜ்குமார் திருமண உறவில் இருந்து வெளியேறி உள்ளதாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்' என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“