குக் வித் கோமாளி ஏராளமான ரசிகர்களை பெற்ற ரியாலிட்டி ஷோ ஆகும். தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் விசித்ரா, மைம் கோபி, ஷெரின், சிருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியன், காளையன், கிஷோர் உள்ளனர்.
இவர்களுடன் சிவாங்கியும் உள்ளார். இந்த சீசனில் இருந்து ஷெரின் தற்போது வெளியேறிவிட்டார். இவருக்கு சீசனில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இந்த நிலையில் எபிசோடில் இருந்து வெளியேறியதும் அம்மணி நேராக கோவாவிற்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இதற்கிடையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷெரீனுக்கு ஓரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“