ஸ்லிம் அண்ட் சிக் ஆக மாறிய ஷெரீன் – பாருங்க நீங்களே அந்த மாற்றத்த!

Biggboss Sherin : ஷெரீனை நேரில் பார்த்தவர்கள் மட்டுமல்லாது சின்னத்திரையில் பார்த்தவர்கள் பெரும்அதிர்ச்சியடைந்தனர். அதற்குக்காரணம் அவரின் உடல்வாகு. அவரது உடல் பெருத்து பெரிய மாற்றத்துடன் காணப்பட்டார்.

By: July 7, 2020, 3:27:33 PM

நடிகை ஷெரீன், குறைந்த நாட்களிலேயே 10 கிலோ அளவிற்கு எடை குறைந்து ஸ்லிம் ஆகவும் சிக் ஆகவும் மாறியிருக்கும் போட்டோக்கள், பார்ப்போரை வியப்படைய வைத்துள்ளது.

2002ம் ஆண்டில் செல்வராகவனின் இயக்கத்திலான துள்ளுவதோ இளமை படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக ஷெரீன் அறிமுகமானார். அந்தகாலத்தில் இளையதலைமுறையினரின் கனவுக்கன்னியாக ஒரு ரவுண்டு வலம்வந்தார். பின் அவரை படங்களில் பார்க்க முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் சில படங்களிலேயே தென்பட்டார். பின் நண்பேன்டா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட படங்களில் நடித்தபோதிலும், ரசிகர்களின் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை.

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். . அந்த நிகழ்ச்சியில் ஷெரீனை நேரில் பார்த்தவர்கள் மட்டுமல்லாது சின்னத்திரையில் பார்த்தவர்கள் பெரும்அதிர்ச்சியடைந்தனர். அதற்குக்காரணம் அவரின் உடல்வாகு. அவரது உடல் பெருத்து பெரிய மாற்றத்துடன் காணப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் தற்போது 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த ஒரு ஆண்டில் தான் 10 கிலோ எடை குறைந்து விட்டேன். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது என்னை நானே கண்ணாடியில் பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் முக்கியம் மகிழ்ச்சியாக இருப்பதுதான். உடல் எடையை குறைப்பது மிகவும் எளிது. கோபமான மற்றும் கடினமான வார்த்தைகளைப் பேசாமல் எப்பொழுதும் நம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் போதும் உடல் எடை தானாக குறைந்து விடும் என்று ஷெரின் கூறியுள்ளார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sherin dhanush thulluvatho ilami weight loss kollywoodbigg boss

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X