நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சாலை விபத்தில் பலி; நடிகருக்கு லேசான காயம்

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சாலை விபத்தில் காலமானார். இந்த விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சாலை விபத்தில் காலமானார். இந்த விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
malayalam actor

நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சி.பி. சாக்கோ, வெள்ளிக்கிழமை அதிகாலை தர்மபுரி அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார். இந்த விபத்தில் ஷைன், அவரது தாய், சகோதரர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பயணித்த கார், ஒரு லாரி மீது மோதியது. அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisment

வெள்ளிக்கிழமை காலை சுமார் 6 மணியளவில் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு குடும்பத்தினர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. எதிர் திசையில் வந்த லாரி கார் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

விபத்து நடந்தபோது காரின் பின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த ஷைன் டாம் சாக்கோவின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது தாயும் சகோதரரும் பெரிய காயங்கள் இன்றி தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment
Advertisements

படுகாயமடைந்த டாம் சாக்கோ, அவரது சகோதரர் உள்ளிட்ட நால்வருக்கு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Malayalam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: