shivangi krishnakumar Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பாப்புலரான சிவாங்கி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தவராக வலம் வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்பு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பாடகியாக தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்கள். இதேபோல், சிவாங்கியும் தமிழில் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களையும் அவர் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3 புரோமோ ஷூட் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிவாங்கி வழக்கம்போல் சில அலப்பறைகளை செய்துள்ளார். ஷூட் முடிந்த பிறகு மணிமேகலையின் BMW காரில் டிரைவிங் கற்றும் இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சிவாங்கி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ யூடியூப்பில் வெளியாகிய ஒரு மணி நேரத்தில் சுமார் 1 லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. பொதுவாக சிவாங்கி, அவரது யூடியூப் சேனலில் பதிவிடும் வீடியோக்கள் பெரும்பாலும் யூடியூப் டிரெண்டிங்கில் வந்துவிடும். அந்த வகையில், இந்த டிரைவிங் வீடியோவும் தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் 6வது இடத்தில் உள்ளது.
சிவாங்கி அந்த வீடியோவில், காரின் பிரேக்கில் இருந்து காலை எப்படி எடுக்கணும் என்று மணிமேகலையிடம் கேட்கிறார். அதற்கு மணிமேகலை, “ஒரு பூ பூக்குற மாதிரி மெதுவா பிரேக்கில் இருந்து கால எடுக்கணும்’’ என்று அவரது பாணியில் விளக்கம் கொடுக்கிறார்.

டிரைவிங் கற்ற பிறகு சிவாங்கி தான் சீக்கிரமே BMW கார் வாங்கப் போவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடுகிறார். வீடியோவின் முடிவில் மணிமேகலை, “மேடம் BMW கார்ல தான் டிரைவிங் கத்துப்பீங்களோ’’ என்று ஃபைனல் பன்ச் வைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“