Advertisment

சிவாங்கியின் ஃபேன் இனியா... ரெண்டு பேரையும் ஒப்பிடுறது நியாயமே இல்லை! சொல்றது யாரு?

Cook with comali shivangi and neha comparison trending in social media: நேஹா மேனனின் புகைப்படத்தோடு குக்வித் கோமாளி ஷிவாங்கியின் புகைப்படத்தையும் இணைத்து நெட்டிசன்கள் சிலர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்திருந்தனர். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

author-image
WebDesk
Apr 14, 2021 19:14 IST
சிவாங்கியின் ஃபேன் இனியா... ரெண்டு பேரையும் ஒப்பிடுறது நியாயமே இல்லை! சொல்றது யாரு?

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்யலட்சுமி' சீரியலில் நடித்து வருபவர் நடிகை நேஹா மேனன். இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பாகிய வாணிராணி மூலம் சீரியலுக்கு அறிமுகமானவர். தற்போது  ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான 'சித்தி 2' போன்ற சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Advertisment

நேஹா சீரியல்கள் மட்டுமல்லாது 'நாரதன்', 'ஜாக்சன் துரை' மற்றும் ‘யட்சன்’  உள்ளிட்ட ஒருசில படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

பாக்யலட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நேஹா மேனன் நடித்துவருகிறார். இவரது கதாபாத்திரத்தைச் சுற்றியே இப்போது அந்த சீரியலின் கதை நகர்ந்து வருகிறது.

இவர் கடந்த மாதம் தனது அம்மா பெண் குழந்தை பெற்றிருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேஹா மேனனின் புகைப்படத்தோடு குக்வித் கோமாளி ஷிவாங்கியின் புகைப்படத்தையும் இணைத்து நெட்டிசன்கள் சிலர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்திருந்தனர். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

அதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர் ஷிவாங்கியுடன் நேஹாவை ஒப்பிடாதீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அறிந்த நேஹா மேனன் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், ஷிவாங்கியுடன் என்னை இணைத்து ஒரு பதிவை உருவாக்கியிருந்தார்கள். அது அன்பால் செய்யப்பட்டதுதான். ஆனால் அதைப்பார்த்த சிலர் ஷிவாங்கியுடன் நேஹாவை ஒப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தார்கள். தயவு செய்து என்னை அவருடன் ஒப்பிட வேண்டாம். ஷிவாங்கி வேற லெவல், அவர் மிகவும் திறமைவாய்ந்தவர். அவருக்கு நானும் ஒரு ரசிகைதான். அதனால் தயவுசெய்து என்னை அவருடன் ஒப்பிட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cook With Comali Shivangi #Neha Menon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment