ஆரஞ்சு மிட்டாய் ஷிவாங்கி: லேட்டஸ்ட் ஸ்வீட் க்ளிக்ஸ்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் போட்டியாளராக களம் இறக்கி, குக் வித் கோமாளியில் கொடி கட்டிப் பறந்து, சினிமா, சின்னத்திரை என கலக்கிக் கொண்டிருக்கும் ஷிவாங்கி வெளியிட்டுள்ள தனது ஆரஞ்சு மிட்டாய் கலர் காஸ்டியூமில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
shivangi, cookku with comali, ஆரஞ்சு மிட்டாய் ஷிவாங்கி, ஷிவாங்கி லேட்டஸ்ட் ஸ்வீட் க்ளிக்ஸ், Shivangi latest Orange Mittay clicks, cookku with Comali

ஷிவாங்கி

விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் போட்டியாளராக களம் இறக்கி, குக் வித் கோமாளியில் கொடி கட்டிப் பறந்து, சினிமா, சின்னத்திரை என கலக்கிக் கொண்டிருக்கும் ஷிவாங்கி வெளியிட்டுள்ள தனது ஆரஞ்சு மிட்டாய் கலர் காஸ்டியூமில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர்ஸ் சீசன் 6-ல் போட்டியாளராக அறிமுகமாகி தனது அழகான குரலால் பாடி ரசிகர்களைக் கவர்ந்தவர் ஷிவாங்கி.

publive-image

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக ஜொலித்த ஷிவாங்கியிடம் பாடும் திறமை மட்டுமல்ல, காமெடி பண்ணும் திறமையும் இருக்கிறது என்று விஜய் டிவிதான் கண்டறிந்தது.

Advertisment
Advertisements

இதையடுத்து, ஷிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சக்கை போடுபோட்டு வரும் குக்கு வித் கோமாளியில் கோமாளியாக எண்ட்ரி கொடுத்து, ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

குக்கு வித் கோமாளியில் புகழ் மற்றும் ஷிவாங்கி இருவரும் பாசமலர் அண்ணன் தங்கைகளாக அடிக்கும் நகைச்சுவைகள் ரசிகர்களை சிரிக்க வைத்து மகிழ்ச்சி அளிக்கும்.

சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்து பெரிய திரையிலும் கால் பதித்தார்.

publive-image

இந்நிலையில், ஷிவாங்கி டிவி நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்தாலும், சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது, ஷிவாங்கி ஆரஞ்சு வண்ண காஸ்டியூமில் ஆரஞ்சு மிட்டாய் போல, தனது லேட்டஸ்ட் க்ளிக்ஸ் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

publive-image

இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் ஆரஞ்சு மிட்டாய் ஷிவாங்கி என்று கம்மெண்ட் செய்து மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Cook With Comali Shivangi Shivangi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: