ஷிவாங்கி இனி விட்டுக் கொடுப்பாரா? பிக்பாஸ் முடிந்த பிறகு இன்னொரு ஆட்டம் இருக்கு!

Tamil Reality Show : நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் மிகவும் பிரபலமான பிரியங்கா விஷய் டிவி ஷோவில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Tamil Reality Show Shivangi Replaced VJ Priyanka In Super Singer Junior : தமிழ் சின்னததிரையில் பிரபலமான தொகுப்பாளிகளில் பிரியங்காவுக்கு முக்கிய இடம் உண்டு. படபடப்பான பேச்சு, தொகுத்து வழங்கும் ஸ்டைல், காமெடி, ஸ்கிரீன் பரஸன்ஸ் என ரசிகர்கள் மத்தியில பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். மேலும் சின்னத்திரையில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது விஜய் டிவியின் ஹிட் ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரியங்கா இந்த ஷோவில் 72 நாட்களை கடந்துள்ளார்  

முன்னணி நடிகரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 5’ ரியாலிட்டி ஷோவின் பிரம்மாண்ட இறுதிப்போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ‘பிக் பாஸ் 5’ டைட்டிலை பிரியங்கா வெல்வார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்பபில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் அவர் தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் ஷா வை தற்போது ம.கா.பா ஆனந்த தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் மிகவும் பிரபலமான பிரியங்கா விஷய் டிவி ஷோவில் இல்லாதது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் தொகுத்து வழங்கி வந்த இரண்டு நிகழ்ச்சிகளில் அவர் மாற்றப்பட்டதால் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  இந்நிலையில், அடுத்து வரவுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியரின் புதிய சீசனுக்கான தொகுப்பாளராக பிரியங்காவிற்குப் பதிலாக சிவவாங்கி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக் ஷோவிற்கும் ம.கா.பா ஆனந்த் தொகுபபாளராக உள்ளார். சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி பல சீசன்களுக்கு முன்பு துவங்கியதில் இருந்தே பிரியங்காவும் ம.க.பா.வும் தான் அதன் அடையளமாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது பிரியங்கா இல்லாத இந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு புதிதாக தோன்றும். இந்த மாற்றம் நிரந்தரமானதா அல்லது ‘பிக் பாஸ் முடிந்தவுடன் பிரியங்கா வந்துவிடுவாரா என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shivangi replaced vj priyanka in super singer junior tamil reality show

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com