விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் அறிமுகமாகி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி புகழ்பெற்றுள்ள பாடகி ஷிவாங்கி வெறும் காமெடி பண்ணுகிற பொண்ணு இல்லை இசை குடும்பத்தின் வாரிசு என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
விஜய் டிவியில் ஒளிபரபான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமானவர் பாடகி ஷிவாங்கி. இவர் தனது நகைச்சுவையான பேச்சு மூலமும் ம.க.ப. பிரியங்காவின் கலாய்த்தலுக்கு சளைக்காமல் கவுண்டர் கொடுத்தார். இதனால், ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிழ்ச்சியிலேயே பாடகியாக மட்டுமல்லாமல் கமெடியாகவும் பெர்ஃபார்ம் செய்தார். சூப்பர் சிங்கரில் தொடர்ந்து, சிறப்பாக பாடிய ஷிவாங்கி இறுதிச் சுற்றுக்கு சென்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/shivangi2-240x300.jpg)
இந்த சூழலில்தான், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்களும் கோமாளிகளும் செய்யும் ரகளைகளும் நகைச்சுவைகளும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானது.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் நடிகை வனிதா டைட்டிலை வென்றார். ரம்யா பாண்டியன் ரன்னராக அறிவிக்கப்பட்டார். இதில் கலந்துகொண்ட ஷிவாங்கி கலக்கப்போவது யாரு பாலாவும் புகழ் இருவரும் எவ்வளவு கலாய்த்தாலும் பதிலுக்கு கவுண்ட்டர் கொடுப்பார். இந்த சீசனில் ஷிவாங்கிக்கு சிம்மக்குரல் சிங்காரி என்ற டைட்டில் கொடுக்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/shivani-family-300x300.jpg)
சூப்பர் சிங்கர் பாடகியான ஷிவாங்கி குக்கு இத் கோமாளி நிகழ்ச்சி மூலம் சிலர் அவரை காமெடி பொண்ணாகவே நினைக்கத் தொடங்கி விட்டனர். உண்மையில் ஷிவாங்கி முழுக்க ஒரு இசைக் குடும்பத்தில் இருந்து வந்தவர். ஷிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் “ராரா... சரசுக்கு ராரா” பாடலை பாடியவர். அதே போல, ஷிவாங்கியின் தந்தை கிருஷ்ணன் ஒரு சங்கீத வித்வான் ஆவார்.
ஷிவாங்கி சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி என்று டிவி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு அவர் தனது தாயாருடன் சேர்ந்து இசை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருதார். அதனால், ஏதோ குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கும் வெறும் காமெடி பெண்ணாக மட்டும் பார்க்க வேண்டாம். அவர் ஒரு இசைக் குடும்பத்தின் வாரிசு ஆவார்.
சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கியை ஒரு தனியார் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள். அங்கே சிறப்பு விருந்தினராக சென்ற ஷிவானியிடம் கல்லூரி மாணவ மாணவிகள் வலிமை அப்டேட் கேட்டு கலாய்க்க அவர்களுக்கு ஷிவானி ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் வலிமை திரைப்படம் கொரோனா பொது முடக்கத்தால் முடங்கி இருந்தது. தளர்வுக்கு பிறகு, படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்தது. இதனால், வலிமை படத்தின் அப்டேட் வருவதில் தாமதமானது. அஜித் ரசிகர்கள் பலரும் அரசியல், விளையாட்டு பிரபலங்களிடம் வலிமை அப்டேட் கேட்டு சர்ச்சையாக்கினார்கள். பின்னர், நடிகர் அஜித் அறிக்கை விட்டு வலிமை அப்டேட் கேட்பதை நிறுத்தச் சொன்னார்.
இதையடுத்து வலிமை பட தயாரிப்பாள போனி கபூர் விரைவில் வலிமை அப்டேட் வெளியாகும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில்தான், ஷிவாங்கியிடமும் மாணவர்கள் நகைச்சுவையாக வலிமை அப்டேட் கேட்டனர். இதற்கு அசராத ஷிவாங்கி அவருடைய ஸ்டைலில் எனக்கே தெரியாது. வந்த பிறகு நான் உங்களுக்கு சொல்கிறேன்” என்று கூறினார்.