New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/ashwin-cook-with-comali.jpg)
Cook with Comali Shivangi: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலேயே அதிக ரசிகர்களை கவர்ந்தது குக் குவித் கோமாளிதான்.அதிலும் சீசன் 2 செம ஹிட் ஆனது. இதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கரில் பாடகியாக வந்த அவர் தனது க்யூட்டான பேச்சால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். அதிலும் குக் வித் கோமாளிக்கு பிறகு அவரது இமேஜ் வேற லெவலுக்கு சென்றுள்ளது. அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு வந்து குவிகிறது. தற்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.
அதேபோல் குக் வித் கோமாளி புகழும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அஸ்வினும் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். பவித்ராவும் காமெடி நடிகர் சதீஷூடன் படம் நடித்து வருகிறார். இப்படி அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் நிறைய பேர் வெவ்வேறு படங்களில் பிசியாகி உள்ளனர். ஷோ அந்தளவிற்கு மக்களிடையே ரீச் ஆனது. சீசன் முடிந்து பல வாரங்கள் ஆகும் நிலையில், ரசிகர்கள் தான் ஷோவை மறக்கமுடியாமல் சமூக வலைதளங்களில் புலம்பி வருகிறார்கள். அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும் இந்த ஷோவை மறக்கமுடியவில்லையாம். அதிலும் ஷிவாங்கி குக் வித் கோமாளி செட்டிற்கே போயுள்ளார்.
குக் வித் கோமாளி செட்டுக்குள் மீண்டும் சென்று அங்கிருந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் ஷிவாங்கி. அதில் கேமரா இங்க இருக்கும், அஸ்வின் இங்க இருப்பாரு..என அவரது ஸ்டைலில் பேசியுள்ளார். "Still not over the show! And this settt❤️which changed many lives." என குறிப்பிட்டுள்ளார்.
ஷிவாங்கியின் இந்த பதிவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் குவிந்துள்ளது. ரசிகர்களும் பதிலுக்கு மிஸ் பன்னுவதாக கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.