shivani amma shivani narayanan father : பிக் பாஸ் 4 வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்று முதல் போட்டியாளர்களின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வர தொடங்கி இருக்கிறார்கள். அதிலும் நேற்று முதல் ஆளாக வந்த ஷிவானியின் அம்மா அவரை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார்.
ஷிவானியின் மீது கடுமையான கோபத்தில் இருந்தார் என்பது அவர் பேசிய வார்த்தைகளிலேயே தெரிந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து ஏமாற்றும் அடைந்ததையும் பார்க்க முடிந்தது.
கார்டன் ஏரியாவில் அமர்ந்து இருவரும் தனியாக பேசுகின்றனர். அப்போது ஷிவானியின் அம்மா, “எதுக்கு இந்த ஷோவுக்கு நீ வந்த? நீ என்ன இந்த வீட்டுக்குள்ள பண்ணிட்டு இருந்தனு வெளியே யாருக்கும் தெரியாதுனு நெனைச்சிட்டு இருக்கியா” என கோபமாக பேசுகிறார். இதனை சற்றும் எதிர்பாராத ஷிவானி, அதிர்ச்சியடைந்தவாறு அப்படி பேசாத அம்மா என கதறினார்.
ஷிவானியின் அம்மா கத்தி அவரை பேசிக்கொண்டு இருந்த போது 'இங்க வந்து நான் பேசுவதால் எதுவும் தெரியப்போவதில்லை. ஏற்கனவே தெரிந்ததால் தான் நான் வந்து பேசுகிறேன் என்றார். பாலாஜி உன்மீது காதல் இல்லை, காதல் வந்தால் சொல்கிறேன் என்று சொன்னபோது எனக்கும் காதல் வராது, நானும் இங்கே விளையாடத்தான் வந்திருக்கிறேன் என்று நீ ஏன் சொல்லவில்லை என ஷிவானியை அவர் கண்டித்தார்
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து இனிமேலாவது நல்ல பெண்ணாக இருந்து சந்தோஷமாக விளையாடு, எல்லோரும் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார்கள். கிறுக்கு மாதிரி சுத்தாதே, போனதெல்லாம் போகட்டும், இனியாவது புத்திசாலித்தனமாக விளையாடு’ என்று அறிவுரை கூறிவிட்டு ஷிவானியின் அம்மா விடைபெற்று சென்றார்.
ஷிவானியின் ரியாக்சன் வெளியே வந்திருக்கும் என நினைக்கிறேன். உங்களை எதுவும் ஷிவானி அம்மா கூறவில்லை. அவரைத்தான் “தனிப்பட்ட முறையில் நீ ஏன் ஒரு முறை கூட, உன் கருத்துக்களை எடுத்து வைக்கவில்லை. அதற்கு நீ வீட்டிலேயே இருந்திருக்கலாம்” என்று கூறியதாக ரம்யா பலாவிடம் விளக்குகிறார்.
இதன் பின்னர் ஆஜித்திடம் பேசிக் கொண்டிருக்கும் பாலாஜி, ஷிவானியின் அம்மாவே வந்து அவரது செயல் குறித்து குறை கூறுகையில், அதில் நானும் சம்பந்தப்பட்டுள்ளேன். இதெல்லாம் என்னால் தான் என்பதை நினைத்தால் குற்றஉணர்ச்சியாக உள்ளது என உருகி அழுதார்.
இந்த எபிசோட் நேற்று ஒளிப்பரப்பான நிலையில், ஷிவானி அம்மா ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளார். அவர் ஷிவானியிடம் நடந்து கொண்டது சரி என்றும், போன சீசன் லாஸ்லியா அப்பாவின் காப்பி என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.