New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/01/Bb5up.jpg)
Shivani Bala Som Ramya Bigg Boss Celebrations Vijay Tv Viral Pics
Bigg Boss Tamil Celebrations அன்பு கேங்கோடு கைகோர்த்த அனிதா சம்பத், ரேகா மற்றும் ஷிவானியின் செல்ஃபி என மேலும் பல பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Shivani Bala Som Ramya Bigg Boss Celebrations Vijay Tv Viral Pics
Bigg Boss 4 Tamil Viral Pics Tamil News : நூறு நாள்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும், சக்ஸஸ் பார்ட்டி, விஜய் டிவி கொண்டாட்டம் என அதனை தொடர்ந்து வரும் சின்னசின்ன நிகழ்ச்சிகள் ஏராளம். அந்த வரிசையில் சமீபத்தில் பிக் பாஸ் கொண்டாட்டங்கள் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சோம், ரம்யா, கேபி, ஆஜீத் என பிக் பாஸ் வீட்டிற்குள் கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகள் ஒன்றாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், சிறிய ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது. 'பாலாஜியுடன் ஷிவானி இல்லையே, எங்கே போனார் ஷிவானி' என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 17-ம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலேவோடு கோலாகலமாக முடிவடைந்ததை அடுத்து தற்போது பிக் பாஸ் கொண்டாட்டங்கள் நிகழ்ச்சி விஜய் டிவியில் நடைபெற்றிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. இந்நாள் போட்டியாளர்கள் மட்டுமல்ல முன்னாள் போட்டியாளர்களான கவின் மற்றும் லாஸ்லியாவும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கொண்டாத்தின்போது பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோமசேகர், சம்யுக்தா, ஆஜீத் மற்றும் கேபி என அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைராகி வரும் நிலையில், 'ஷிவானி எங்கேடா?' என்கிற கமென்ட்டுகளை அதிகம் காணமுடிகிறது. ஓரிரு புகைப்படங்களைத் தவிர ஷிவானி வேறு எங்கும் இல்லை. அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லி அனுப்பிட்டாங்க போலயே! மேலும், புகைப்படங்களிலிருந்து சோம் மற்றும் ரம்யா இருவரை மட்டும் கிராப் செய்து அவர்களுடைய பெயர்களை இணைத்து 'சோம்யா' என்று பதிவிட்டும் வருகின்றனர் வெறித்தன ரசிகர்கள்.
அதுமட்டுமின்றி, கோட் சூட்டில் ரம்யாவும் லெஹெங்கா சோலியில் சம்யுக்தாவும் இணைந்து ஆடிய ஷார்ட் வீடியோவும் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அன்பு கேங்கோடு கைகோர்த்த அனிதா சம்பத், ரேகா மற்றும் ஷிவானியின் செல்ஃபி என மேலும் பல பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.