தனுஷின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடிய ஷிவானி : வீடியோ வைரல்

தற்போது , ஷிவானி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

பகல் நிலவு , கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் ஷிவானி.  குறிப்பாக, பகல்நிலவு சீரியலில் ஹீரோயின்,  வில்லி கதாபாத்திரத்துடன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் தனது ரசிகர்களை எப்போதும் என்கேஜ்டாக வைத்திருப்பவர்.  13 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் பின்தொடர்கிறார்கள் என்றால் சாதரணமான விசயமா?

தற்போது , அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

❤️????

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

 

 

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற’ ரவுடி பேபி’ என்ற பாடலுக்கு ஷிவானி நடனமாடியுள்ளார். ஷிவானியின், இந்த பதிவை ஒரே நாளில் 856,953 மக்கள் பார்வையிட்டுள்ளனர். ரசிகர்களும், பொது மக்களும் தங்களது கருத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.
அஞ்சனா அலிகான் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் முகென் நடிக்க இருக்கும் படத்தில்  ஹீரோயினாக நடிகை ஷிவானி அறிமுகமாக உள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . சினிமாவில் கலக்க இருக்கும் ஷிவானி, தற்போது தனது திறமையை இன்ஸ்டாகிராம் மூலம் வெளிபடுத்தி வருகிறார் என்ற நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘ரவுடி பேபி’ பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தமிழ் பாடல் என்ற சாதனையை நிகழ்த்தியது. மேலும், 2019ம் ஆண்டின் டாப் 10 மியூசிக் வீடியோ பட்டியலில்‘ரவுடி பேபி’ பாடல் 7வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shivani narayanan instagram rowdy baby dance goes viral

Next Story
நடிகர் சோனு சூட் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்புactor Sonu Sood, bollywood actor sonu sood, சோனு சூட், கல்வி உதவித்தொகை அறிவிப்பு, கொரோனா வைரஸ், sonu sood announces scholarship for students, higher education, coronavirus
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express