Advertisment

ஷோபனாவும் அவரது தோழிகளும்; நடிகைகள் பாடிய ‘மார்கழி திங்கள்’ வீடியோ

நடிகைகள் ஷோபனா, ரேவதி, சுஹாசினி, நித்யா மேனேன், அனு ஹாசன் உள்ளிட்டோர் பாடுகிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
shobana, shobana sing maargazhi thingal song, margazhi thingal song video, revathi, suhasini, சோபனா, ஷோபனா, வைரல் வீடியோ, நித்யா மேனன், ரேவதி, சுஹாசினி, ரம்யா, கனிகா, மார்கழி திங்கள் பாடல், nithya menon, maargazhi thingal song video goes viral, viral video, ramya, kanika, anu haasan, actress singing viral video

நடிகை ஷோபனா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நானும் எனது தோழிகளும் என்று தலைப்பிட்டு ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்நாளாம்’ என்ற பாடலை நடிகைகள் ரேவதி, சுஹாசினி, நித்யா மேனேன், அனு ஹாசன் உள்ளிட்டோர் பாடுகிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரமான சென்னையில் மார்கழி மாதத்தில் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளால் கலைகட்டுவது வழக்கம். மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய புகழ்பெற்ற மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் என்ற பாடல் பாடுவார்கள்.

நடிகைகள் ரேவதி, சுஹாசினி, அனு ஹாசன், ரம்யா, கனிகா, ஜெயஸ்ரீ ஆகியோர் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்நாளாம் பாடலை பாடும் வீடியோவைப் பார்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

அந்த வகையில், நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா, ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்நாளம்’ என்ற பாடலை நடிகைகள் ரேவதி, சுஹாசினி, நித்யா மேனன், அனு ஹாசன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், நடிகைகள் ரம்யா, கனிகா, உமா, ஜெயஸ்ரீ ஆகியோர் மார்கழித் திங்கள் பாடலை பாடியுள்ளனர். பாரதநாட்டியக் கலைஞரான ஷோபனா இந்த பாடலுக்கு பரதநாட்டியம் ஆடியுள்ளார்.

இந்த பாடலும் வீடியோவும் மிகவும் நன்றாக இனிமையாக இருப்பதாக ரசிகர்களும் நெட்டிசன்களும் ஷோபனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Nithya Menen Suhasini Manirathnam Revathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment