தமிழ்த் திரையுலகில் ஒரு பெண் நடிகை தனது கடந்தகால அனுபவங்களைத் திறக்கும் போதெல்லாம், அவர் ஒரு சர்ச்சையை வெளிப்படுத்துகிறார் என்று அர்த்தம். சமீபத்தில் அவ்வாறு செய்தவர் தேசிய விருது பெற்ற நடிகை, புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோபனா. சமீபத்தில் சுஹாசினி மணிரத்னத்துடன் ஒரு நேர்காணலில், ஷோபனா திரையுலகில் தனது வளரும் ஆண்டுகளில் சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: ரஜினிக்கு டூப் போட்ட நடிகரின் சோகக் கதை: பிரபல இயக்குனர் மகனுக்கே இந்த நிலையா?
சிவா (1989) படத்தில் ரஜினிகாந்துடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு மணிசித்திரத்தாழு படத்தில் நடித்த ஷோபனாவிடம் சுஹாசினி கேட்டபோது, ஷோபனா, ரஜினி எப்போதும் ஜென்டில்மேன் என்று கூறினார். சிவா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார், படப்பிடிப்பின்போது தனது பிரச்சனைகளை ரஜினி புரிந்து கொண்டதாக ஷோபனா கூறினார். “சிவா படத்தில் ஒரு மழை காட்சியை படமாக்கினார்கள். அவர்கள் அதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை, ஆனால் உடையைப் பார்த்து நான் அதைப் புரிந்துக் கொண்டேன், ஏனெனில் அது ஒரு வெளிப்படையான வெள்ளை சேலை, எனவே இது ஒரு மழை பாடல் என்று நான் புரிந்துகொண்டேன். என்னிடம் உள்ளே அணிந்துக் கொள்ள எதுவும் இல்லை என்று காஸ்ட்யூமரிடம் சொன்னேன். வீட்டுக்கு வந்து ரெடி பண்ணிட்டு வரலாமா என்று கேட்டபோது, பத்து நிமிடத்தில் ஷாட் எடுக்கப்படும் என காஸ்ட்யூமர் கூறினார். எனவே இந்த மழை பாடல் திட்டமிட்ட கொலை என்று நினைக்கிறேன். ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் தெரியாது,” என்று சிரித்தவாறே கூறினார்.
ஷோபனா மேலும் கூறுகையில், “அந்த மழை பாடல் ஒரு பெரிய தயாரிப்பு, படப்பிடிப்பு தாமதத்திற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. அதனால், ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இருந்த ஒரு பிளாஸ்டிக் டேபிள் கவரை எடுத்து பாவாடைக்குள் சுற்றிக் கொண்டு ஷாட்டுக்கு ரெடியானேன். படப்பிடிப்பின் போது ரஜினி சார் என்னை டான்ஸ் ஸ்டெப்பில் தூக்கிட்டு போக, கவர் சத்தம் போட ஆரம்பிச்சது. அவருடைய எக்ஸ்பிரஷன் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது (அவர் குழப்பமடைந்தார்). அதிர்ஷ்டவசமாக, அவர் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. படப்பிடிப்பில் அனைவரும் வசதியாக இருப்பதை அவர் உறுதி செய்கிறார்,” என்று கூறினார்.
ஷோபனா கூறும் பாடல் இதோ:
அந்த பேட்டியில், ஷோபனா இதுவரை தான் நடித்ததிலே கடினமான படம் மணிரத்னத்தின் தளபதி என்று கூறினார். அந்த அனுபவத்தைப் பற்றி பேசுகையில், ஷோபனா, ரஜினிகாந்த் தாமதமாக வந்ததால் மணிரத்னத்தின் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டது என்று கூறினார். மேலும், “படப்பிடிப்பு நேரம் கடினமாக இருந்தது. எப்பொழுதும் அதிகாலையில்... மணி சார் சொன்னது இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு, ‘ஷாட்டுக்கு 300 பேர் வர முடியும் என்றால், ஏன் ஒருவரால் வர முடியாது?. அந்த 300 பேரில் நானும் ஒருவள். இப்படம் பெரிய அளவில் எடுக்கப்பட்டது, அந்த காலக்கட்டத்தில் தொழில்நுட்ப ரீதியாக கடினமாக இருந்தது. எனவே, அவர்கள் அதை நீண்ட நேரம் எடுத்தார்கள்,” என்றும் ஷோபனா கூறினார்.
உரையாடலின் போது, சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஷோபனா இருவரும், அப்போது கதாநாயகிகளுக்கு மானிட்டரைப் பார்க்கும் பாக்கியம் இல்லை என்று குறிப்பிட்டனர். தற்போது விஷயங்கள் நன்றாக மாறிவிட்டன என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.