Advertisment

Shruti Haasan - Michael Corsale: காதலரை பிரிந்து விட்டாரா ஸ்ருதி ஹாசன்?

Shruti Haasan - Michael Corsale: இவர்களுக்கு பிரேக் அப் ஆகியிருப்பது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shruti Haasan Michael Corsale broke up

Shruti Haasan - Michael Corsale Break up: நடிகை ஸ்ருதி ஹாசனும் லண்டனைச் சேர்ந்த தியேட்டர் கலைஞர் மைக்கேல் கார்சேலும் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்தனர்.

Advertisment

மற்ற நடிகைகளைப் போல் எதையும் மறைக்காமல், மைக்கேலுடன் இருக்கும் படத்தை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதி. லண்டன், மும்பை மற்றும் சென்னையில் ஜாலியாக ஊர் சுற்றி வந்தது இந்த அழகு ஜோடி.

 

View this post on Instagram

 

Spent the weekend in the ⛰ with this ???? @shrutzhaasan Xx #india #yercadu #travel #nature

A post shared by Michael Corsale (@themichaelcorsale) on

சென்னையில் நடந்த ஒரு திருமணத்தில் ஸ்ருதி சேலையும், மைக்கேல் வேட்டியும் அணிந்து கலந்துக் கொண்டனர். இந்தப் படங்கள் இணையத்தில் 1 வாரத்திற்கும் மேல் டிரெண்டிங்கில் இருந்தது.

ஸ்ருதியும் முன்பு போல் படங்களில் கமிட்டாகாமல் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தார். அதனால் விரைவில் ஸ்ருதியும் மைக்கேலும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

Shruti Haasan - Michael Corsale Break up

இந்நிலையில் தற்போது இந்த இளம் ஜோடி பிரிந்து விட்டது போல் தெரிகிறது.

“துரதிஷ்டவசமாக வாழ்க்கை நம்மை உலகின் எதிர் எதிர் பக்கங்களில் வைத்து விட்டது. அதனால் இனி பாதையில் தனியாக நடக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆனால் எப்போதுமே இந்த இளம் பெண் (யங் லேடி) தான் எனது சிறந்த துணையாக இருப்பார். நல்ல தோழியாக அவள் கிடைத்ததை நன்றியுடன் பார்க்கிறேன்” என மைக்கேல் ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருக்கிறார்.

அதே நேரத்தில் மைக்கேலுடன் தான் எடுத்துக் கொண்ட பெரும்பான்மையான படங்களை இன்ஸ்டாவிலிருந்து நீக்கியிருக்கிறார் ஸ்ருதி. நண்பர்களுடன் மைக்கேலும் ஸ்ருதியும் இருக்கும் சில படங்கள் மட்டுமே உள்ளது.

எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்!

இதனால் இவர்களுக்கு பிரேக் அப் ஆகியிருப்பது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது.

எனவே சமூக வலைதளங்களில் கண்ணீர் வடிக்கிறார்கள் இந்த ஜோடியை ரசித்தவர்கள்

Tamil Cinema Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment