கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பத்தில் நடைபெற்று வந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக படப்பிடிப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனுஷ் பொங்கல் தினத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு, தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுன் தொடங்கப்பட்ட நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அல்பிரி பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே படப்பிடிப்பு நடைபெறும் பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பதையில் திருப்பிவிடப்படடன. இதன் காரணமாக படக்குழு மீது புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் ஆம்புலன்ஸ்கள் செல்லவும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த புகாரின் காரணமாகவும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதியை திருப்பதி போலீசார் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்ற வாகனங்கள் வெவ்வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டன, இதனால் குறிப்பிடத்தக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், இந்த விவகாரத்தில், அதிகாரிகள் தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மேலும் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால், படப்பிடிப்பு அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்த படத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்து எங்கு நடக்கும்? தயாரிப்பாளர்கள் இடத்தை மாற்றுவார்களாக என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்திற்கு தாராவி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், நாகார்ஜுனா கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து தயாரிப்பு நிர்வாகம் சார்பில் எவ்வித உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“