மியூசியத்தில், ஒரு படத்திற்கு முன் நடிகை ஸ்ரேயா பிகினி டான்ஸ் ஆடுவதும், அதற்கு அந்த படத்தில் உள்ள மனிதரின் முகம் குரங்காக மாறும் வீடியோ, வைரலாகிவருகிறது.
கோலிவுட்டில், ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். பின் ஒருபாடலுக்கு நடனம் என்ற நிலைக்கு சென்று, இறுதியாக சிம்பு நடித்த அன்பானவன், அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்திருந்தார்.
பின் திடீரென்று நடிப்பிற்கு முழுக்கு போட்ட அவர், ரஷ்ய ஆண்நண்பரை கரம்பிடித்தார். சிறிதுகாலம் ஒதுங்கியிருந்த ஸ்ரேயா, அவ்வப்போது சமூக ஊடகங்களில் போட்டோக்கள், வீடியோக்களை பதிவேற்றி வந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு விடியோ பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோவில், ஒரு படத்திற்கு முன் ஸ்ரேயா பிகினி உடையில் நடனம் ஆடுகிறார். அந்த படத்தில் உள்ள முகம், குரங்கின் முகமாக மாறுகிறது. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஸ்ரேயா, விமல் நடிப்பில் உருவாகிவரும் சண்டக்காரி படத்தின் மூலம் ரீ என்ட்ரி தரஉள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ் வீடியோ...