நடிகை ஸ்ரேயாவுக்கு மார்ச் மாதம் டும்டும்டும்? காதலரை மணக்கிறார்

பிரபல நடிகை ஸ்ரேயா தன் காதலரை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கருத்து கூறவில்லை.

பிரபல நடிகை ஸ்ரேயா தன் காதலரை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற ஸ்ரேயா சமீப காலமாக திரையில் முகம் காட்டுவதில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிக்கும் நரகாசூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கொசேவ்-ஐ வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் வரும் மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், நடிகை ஸ்ரேயா இச்செய்தியை உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், அவருக்கு மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

×Close
×Close