scorecardresearch

’தர்பார்’ செட்டில் ஷ்ரேயா: சூப்பர் ஸ்டாருடன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா?

கடந்தாண்டு தனது ரஷ்ய காதலரான தொழிலதிபர் ஆண்ட்ரி கோர்ஷீவ் என்பவரை மணந்தார்.

Shriya Visit Darbar Set
Shriya Visit Darbar Set

Shriya Saran Visits Darbar Set: நடிகை ஷ்ரேயா சரண் தென்னிந்திய சினிமாவில் முக்கியமானவர். தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகாஸ்டார் சிரஞ்சீவி உட்பட தென்னிந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திரங்களுடனும் ஜோடியாக நடித்துள்ள ஷ்ரேயா, சில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக சிம்பு நடித்திருந்த ”அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்தில் தமிழில் நடித்திருந்தார் ஷ்ரேயா. கடந்தாண்டு தனது ரஷ்ய காதலரான தொழிலதிபர் ஆண்ட்ரி கோர்ஷீவ் என்பவரை மணந்தார். இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ஆகியோருடன் ஷ்ரேயா இருக்கும் புகைப்படம் வைரலாகியது.

அதனால் ‘தர்பார்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷ்ரேயா நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. ஆனால் ஷ்ரேயா தர்பார் செட்டுக்கு சாதாரணமாக சென்றதாகவும், அவர் படத்தில் நடிக்கவில்லை என்றும் நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ”சிவாஜி” படத்தில் நடித்தார் ஷ்ரேயா. அந்தப் படத்தில் “தர்பார்” கதாநாயகி நயன்தாரா ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Shriya saran visit superstar rajinikanth darbar set