எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் - ஸ்ருதி ஹாசன்!

விவசாயத்தை மையமாக வைத்து சமூக கருத்துகளை தாங்கி வரும் படமாக உருவாகவிருக்கிறதாம் லாபம்.

விவசாயத்தை மையமாக வைத்து சமூக கருத்துகளை தாங்கி வரும் படமாக உருவாகவிருக்கிறதாம் லாபம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Laabam: Sethupathi - Shruti Haasan

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி, இந்த கோடையிலும் பட மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

Advertisment

தற்போது கடைசி விவசாயி, சிந்துபாத், சங்கத் தமிழன், மாமனிதன் ஆகிய தமிழ் படங்களிலும், மார்கோனி எனும் மலையாளப் படத்திலும், சைர நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மீண்டுமொரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை, ’இயற்கை, ஈ, பேராண்மை’ போன்ற படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

Advertisment
Advertisements

இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ‘புறம்போக்கு எனும் பொதுவுடமை’ படத்தை இயக்கியவர். தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ’லாபம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை இயக்குநர் ஆறுமுககுமாரின் 7சி எண்டெர்டெயின்மெண்டும், விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும் இணைந்துத் தயாரிக்கின்றன. படத்திற்கு இசை டி.இமான்.

விவசாயத்தை மையமாக வைத்து சமூக கருத்துகளை தாங்கி வரும் படமாக உருவாகவிருக்கிறதாம் லாபம். விவசாயியாக விஜய் சேதுபதியும், டான்சர், பாடகி என மக்களை பொழுது போக்கும் வேடத்தில் ஸ்ருதியும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, ”எனக்குப் பிடித்த நடிகருடன் இணைந்துப் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறதென” இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

 

Vijay Sethupathi Shruti Haasan Arumuga Kumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: