New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/12/shruti-haasan-2.jpg)
shruti haasan, ஸ்ருதி ஹாசன்
shruti haasan, ஸ்ருதி ஹாசன்
நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது காதலர் மைக்கேலுடன் இணைந்துள்ளதாக கூறி அவரை பற்றி ஸ்வீட் மெசேஜ் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு ஒரு காலத்தில் டஃப் கொடுத்தவர் ஸ்ருதி ஹாசன். பன்மொழி படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார்.
இவரும் லண்டனில் வசித்து வரும் நடிகரான மைக்கேல் கார்சலேவும் சமீபக் காலங்களில் பொது நிகழ்ச்சியில் எல்லாம் ஒன்றான கலந்துக் கொள்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு தனது தந்தையுடன் கலந்துக் கொண்ட திருமண நிகழ்ச்சியில் மைக்கேலையும் அழைத்து வந்திருந்தார்.
மணமக்கள் கோலத்தில் ஸ்ருதி - மைக்கேல் : திருமணத்திற்கு முன்னோட்டமா?
தமிழ்நாடு பாரம்பரிய உடையில் பார்க்கவே ஜோராக இருந்த இவர்களின் புகைப்படம் தான் அந்த வாரத்தின் பேச்சுப் பொருளாக இருந்தது. அதன் பின்னர் அவ்வப்போது இவர்கள் திருமணம் குறித்த பேச்சுக்களும் அவ்வப்போது வந்து போகிறது.
இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாகிவிட்டார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்ருதி, “என்னை சிரிக்க வைப்பவன் நீ... அது தான் இந்த உலகிலேயே முக்கியமான ஒன்று” எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.