New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/28/YPmaJoLcpKz9LpRa3Tl4.jpg)
சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதையடுத்து அவர் பதில் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் சின்னத்திரையில் வித்யா என்கிற கேரக்டரில் நடிப்பவர் தான் ஸ்ருதி நாராயணன். சில நாட்களுக்கு முன்பு அவரது வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இந்நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக ஸ்ருதி நாராயணன் பதிலடி கொடுத்துள்ளார்.
சினிமாவிலோ, சின்னத்திரையிலோ சாதிக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சினிமா மற்றும் சீரியல்களில் பெண்களுக்கு வாய்ப்பு வேண்டுமா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று ஒரு பிம்பம் இருக்கத்தான் செய்கிறது.
சூழல் இப்படி இருக்க சின்னத்திரையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு தனது கலை பயணத்தை தொடங்கியவர் தான் ஸ்ருதி நாராயணன். சென்னையை சேர்ந்த அவர் கல்லூரி படிக்கும் போது நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததன் காரணமாக சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை தீவிரமாக தேடி சீரியல் வாய்ப்பு கிடைத்து நடிக்க தொடங்கினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான கார்த்திகை தீபம் சீரியல் தொடங்கி மாரி சீரியலிலும் நடித்தார். ஆனால் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த சீரியல் என்றால் சிறகடிக்க ஆசை தான். அதில் அவர் ரோகிணிக்கு தோழியாக வித்யா என்கிற கேரக்டரில் நடித்துவருகிறார்.
டிவி சீரியல்களில் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். அதாவது சமந்தா ரீ என்ட்ரி கொடுத்த ராஜ்&டிகே இயக்கிய சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸிலும் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ என்று ஒரு சமூக வலைதளங்களில் பரவின. அதனைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் வாய்ப்புக்காகத்தான் அவர் இப்படி செய்தார் என்று பலரும் பேச ஆரம்பித்த நிலையில் ஸ்ருதி தற்போது அந்த வீடியோ குறித்து பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதி நாராயணன் இந்த விவகாரம் குறித்து தற்போது தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார். அதாவது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு ஏஐ குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தனது வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை ஸ்ருதி தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
மேலும் இன்னொரு ஸ்டோரியில், "ரொம்ப கடினமான காலகட்டத்தில் இருக்கிறேன். நானும் ஒரு பெண்தான். எனக்கு உணர்வுகள் உண்டு. அனைத்தையுமே காட்டு தீ போல் பரப்பாதீர்கள். உங்கள் தாய், சகோதரி, காதலி போன்றோரும் பெண்கள்தான். அவர்களுக்கும் என் போல்தான் உடல் இருக்கிறது. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பார்த்து என்ஜாய் செய்யுங்கள்" என்று தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் சில சட்டங்கள் குறித்தும் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.