’அழகு’ சீரியல் சுதாவுக்கு இத்தனை வயசாச்சா? நம்ப முடியலயேப்பா...

Serial Artist Lifestyle: விஜய் டிவி-யின் ‘ஆபிஸ்’, ஜி தமிழின் ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’, ஆகிய தொடர்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார்.

Shruthi Raj: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’தென்றல்’ தொடரில், தீபக்கிற்கு ஜோடியாக, துளசி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். தற்போது ‘அழகு’ சீரியலில் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Shruthi Raj, Azhagu serial

ஸ்ருதி ராஜ்

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பணியாற்றி வருகிறார் ஸ்ருதி. 1979, பிப்ரவரி 25 அன்று கேரளாவில் பிறந்த இவர், மலையாள திரைப்படமான “அக்ராஜன்”-ல் அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் விஜய்யின் ‘மாண்பு மிகு மாணவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். காதல் டாட் காம், ஜெர்ரி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், ஸ்ருதியால் பெரிய திரையில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை.

Shruthi Raj, Azhagu serial

ஸ்ருதி ராஜ்

பின்னர் நடிகை தேவயானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கோலங்கள் சீரியலில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு ஸ்ருதிக்கு கிடைத்தது. அதன் பிறகு தான் தென்றல் சீரியலில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். விஜய் டிவி-யின் ‘ஆபிஸ்’, ஜி தமிழின் ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’, ஆகிய தொடர்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, சன் டிவி-யின் ‘அபூர்வ ராகங்கள்’ மெகா தொடரில் நடித்து முடித்தவர், தற்போது அழகு சீரியலில் நடித்து வருகிறார்.

Shruthi Raj, Azhagu serial

ஸ்ருதி ராஜ்

தனது நடிப்புக்காக பல சின்னத்திரை விருதுகளையும் ஸ்ருதி வென்றிருக்கிறார். இவரது அப்பா சிவ் ராஜ், அம்மா டிம்பி ராஜ். 40 வயதாகும் ஸ்ருதி ராஜ் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என சமீபத்திய நேர்க்காணலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close