/indian-express-tamil/media/media_files/2025/08/26/hey-ram-2025-08-26-13-17-12.jpg)
கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கை பல பரிமாணங்களைக் கொண்டது. நடிப்பது, இயக்குவது, பாடுவது என பன்முகத் திறமைகளைக் கொண்ட அவர், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கடந்து வந்திருக்கிறார். அப்படி ஒரு நிகழ்வைப் பற்றி அவரது மகள் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இது பலருக்கும் தெரியாத ஒரு காதல் ரகசியத்தையும், 'ஹேராம்' திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்ருதிஹாசன் பகிர்ந்துகொண்ட தகவலின்படி, கமல்ஹாசன் பெங்காலி மொழியை கற்றுக்கொண்டதற்கான காரணம் ஒரு திரைப்படத்திற்காக அல்ல, மாறாக ஒரு காதல் கதைக்காகத்தான். அவருக்கு அபர்ணா சென் குப்தா என்ற பெங்காலி நடிகை மீது காதல் இருந்திருக்கிறது. அந்தக் காதலியைக் கவரவும், அவருடன் நெருக்கமாகப் பேசவும் தான் அவர் பெங்காலி மொழியைக் கற்றுக்கொண்டாராம்.
இந்த காதல் கதைக்கும், கமல்ஹாசனின் புகழ்பெற்ற படைப்பான 'ஹேராம்' படத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. அந்தப் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரமான சக்திவேல், வங்காளத்தில் வாழும் ராணி முக்கர்ஜி என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்வார். அந்தப் பெண்ணின் பெயர் 'அபர்ணா' என்று இருக்கும். இது பலருக்கும் ஒரு சாதாரண கதாபாத்திரப் பெயராகத் தோன்றலாம். ஆனால், ஸ்ருதிஹாசன் சொன்ன ரகசியம், அது ஒரு தனிப்பட்ட நினைவின் வெளிப்பாடு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. தன்னுடைய காதலியின் நினைவாக, அந்தப் பெயரைக் கதையில் பயன்படுத்தியுள்ளார் கமல்ஹாசன் என்று மகள் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்திய ஸ்ருதிஹாசன், அவரது தந்தை எப்படி பெங்காலி மொழியை கற்றுக்கொண்டார் என்பதற்கான உண்மையான காரணத்தை பகிர்ந்துள்ளார். பலரும் அவர் தனது படங்களுக்காக பெங்காலி கற்றுக் கொண்டதாக நினைத்திருக்கக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. அது காதல் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஒரு நேர்காணலில் பேசிய ஸ்ருதி, தனது தந்தையின் இளம் வயதில், அவருக்கு அபர்ணா சென் என்ற ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டதாகவும், அந்த அபர்ணாவை கவர்வதற்காகத்தான் அவர் பெங்காலி மொழியைக் கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
ஆங்.... pic.twitter.com/wPrhY5FOoB
— Jesse Pinkman ❤️ (@Putinism7) August 25, 2025
இந்த காதல் கதைக்கும் கமல்ஹாசனின் "ஹே ராம்" படத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. பலருக்குத் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால், அந்த படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரமான சக்திவேல் நாயரின் மனைவி பெயர் அபர்ணா ஆகும். 1960கள் மற்றும் 70களில் முன்னணி நடிகையாக இருந்த அபர்ணா சென் மீதான அந்த காதல், ஹே ராம் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு அபர்ணா என்ற பெயரை வைப்பதற்கு காரணமாக இருந்ததாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.