நடிகர் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் வேடிக்கையான குவிஸ் டிக்டாக் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு நடிப்பிலும் தொழில் நுட்பத்திலும் சாதித்தவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் சினிமா துறையில் நடிகைகளாக சாதித்து வருகின்றனர். இருவரும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை தடம் பதித்து வலம் வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் வீட்டில் உள்ள நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் தங்கள் ரசிகர்களுடனான நல்லுறவு பொது முடக்க காலத்தில் முடங்கிப்போகாமல் இருக்க சமூக ஊடகங்களில் வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் ஸ்ருதி ஹாசனும் அக்ஷரா ஹாசனும் ஒரு வேடிக்கையான குவிஸ் டிக்டாக் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
“இந்த வேடிக்கையான யோசனை அக்ஷரா ஹாசனுடையது. நன்றி குட்டி என்று” ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், கேட்கப்படும் குவிஸ் கேள்விகளுக்கு சகோதரிகள் இரண்டு பேரும் விரல்களைக் காட்டி யார் என்று அழகான முக பாவங்களுடன் விடையளிக்கின்றனர்.
அப்படி என்ன கேள்வி கேட்கப்பட்டது யார் என்ன பதிலளித்தார்கள் என்று பார்ப்போம்.
* இரண்டு பேரில் யார் சோகமான திரைப்படத்தைப் பார்த்து அழுவார்கள்? என்ற கேள்விக்கு அக்ஷரா ஹாசன் நான் என்று விரல் காட்டி பதில் அளிக்கிறார்.
* 5 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவது யார்? என்ற கேள்விக்கு அக்ஷரா ஹாசன் நான்தான் என்று விரலைக் காட்டி பதில் அளிக்கிறார். இதில் சுவாரஸியமாக அந்த கேள்வியின்போது ஸ்ருதி ஹாசனும் அக்ஷரா ஹாசன் என்று விரல் நீட்டுகிறார்.
அதே போல, பெரும்பாலும் யார் பிறந்தநாளை மறந்துவிடுவார்கள் என்ற கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் நான்தான் என்று கூறுகிகிறார்.
ஹாசன் சகோதரிகளின் அழகான இந்த வேடிக்கை குவிஸ் வீடியோ சமூக ஊடகங்களில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"