Actress Shruti Haasan Celebrating her 33rd Birthday : உலக நாயகன் கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் இன்று 33வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.
Advertisment
நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகை சரிகா தாகூர்-க்கு 1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்தார் ஸ்ருதி ஹாசன். சிறிய வயதில் இருந்தே ஆடல், பாடல் நடிப்பு என பல கலைகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தவர். இவருக்கு அக்ஷரா ஹாசன் என்ற தங்கை இருக்கிறார். தந்தையை போலவே ஸ்ருதி மற்றும் அக்ஷரா இருவருமே திரைத்துறையில் ஒரு கலக்கு கலக்கி வருகின்றனர்.
Shruti Haasan Birthday special : ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள்
தனது 6 வயதில், சிவாஜி கணேஷன் மற்றும் கமல் ஹாசன் நடித்திருக்கும் தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பிறகு 2000ம் ஆண்டில் ஹே ராம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். 2009ம் ஆண்டு துணை நடிகராக தெலுங்கு மொழியில் ‘லக்’ படத்தில் டோலிவுட்டில் அறிமுகமானார்.
Advertisment
Advertisements
பின்னர், 2011ம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் ஒரே நேரத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் ‘அனகநாடு ஓ தேருடு’ என்ற படத்திலும், தமிழில் 7ம் அறிவு படத்தில் ஹீரோயின் ஆனார். அந்த இரண்டு படங்களுமே சிறந்த அறிமுக கதாநாயகி என்ற விருதை அவருக்கு பெற்று தந்தது.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2012ம் ஆண்டு 3 படம் வெளியானது. அந்த படத்தில் நடித்த சுருதி அதே வருடம் சிறந்த கதாநாயகி விருதுக்கு தேர்வாகியிருந்தார். 2015ம் ஆண்டு ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பன்மொழிகள் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
2015ம் ஆண்டு தளபதியுடன் புலி படத்திலும், தலயுடன் வேதாளம் படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். பின்னர் 2017ம் ஆண்டு சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து மெகாஹிட் படமான சிங்கம் 3 -ல் நடித்திருந்தார்.
இவ்வாறு தேவர் மகன் முதல் சிங்கம் 3 வரை அவர் கையில் எடுத்த தமிழ் படங்கள் அனைத்துமே மெகா ஹிட் அடித்துள்ளது. தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் ஸ்ருதி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.