/indian-express-tamil/media/media_files/2025/08/15/sivaji-shruthi-2025-08-15-17-34-41.jpg)
சிவாஜி மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். கமல்ஹாசன் பல மேடைகளில் சிவாஜியை தனது ஆசானாகக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் "பார்த்தால் பசி தீரும்", "சத்யம்", "தேவர் மகன்" போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். "தேவர் மகன்" படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிவாஜி நடித்தது, இவர்களது உறவை மேலும் வலுப்படுத்தியது.
சிவாஜி கணேசன் 3வது வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும், கமல்ஹாசன் 8வது வரை படித்ததால், இருவரும் 5 வகுப்புகள் வித்தியாசம் உள்ளவர்கள் என சிவாஜி கணேசன் விளையாட்டாகக் கூறுவதுண்டு.இந்நிலையில்சிவாஜிகணேசனுக்கும்னதுமகள்ஸ்ருதிஹாசனுக்கும்இடையில்நடந்தஒருசுவாரஸியமானநிகழ்வைபற்றிகமல்ஹாசன்கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதிஹாசன், அக்ஷராவை நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஒரு சுவாரசியமான அனுபவத்தைப் பற்றிரெட்நூல்யூடியூப்பக்கத்திற்குஅளித்தபேட்டியில்தெரிவித்துள்ளார். கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், அப்ஷராசனைசிவாஜிவீட்டில்விட்டுச்செல்லும்போது "காட்பாதர்" திரைப்படத்தில் மார்லன் பிராண்டோ தனது பேரக் குழந்தையுடன் விளையாடுவது போல ஸ்ருதியுடன்விளையாடுவாரோ என்று கமல்ஹாசன் நினைத்தார்.எனவே, கமல்ஹாசன் பிள்ளைகளிடம்,பார்த்துநடந்துக்கோங்க, வேறு எதுவும் செய்யாதீர்கள் என்றுசொல்லிவிட்டுவருவாராம்.
ஒருநாள், சிவாஜி கமல்ஹாசனிடம், “உன் பொண்ணு மகா கெட்டிக்காரிடா” என்று கூறினாராம். கமல்ஹாசன்சரிங்கஎன்றாராம், சிவாஜிஸ்ருதியைவம்புக்குஇழுக்கலாம்என்பதற்காக"இந்தியாவிலேயே சிறந்த நடிகர் யார்?" என்று கேட்டார். அதற்கு ஸ்ருதியோசித்துக்கொண்டுஇருந்திருக்கிறார். "நான் சொல்லட்டுமா? நான்தான் உங்க அப்பா கிட்ட கேளு அவன் சொல்லுவான்" என்று சிவாஜிகூறினாராம். பின்னர்ஸ்ருதிகீழேபார்த்துதரையைதடவிவிட்டுஎங்கஅப்பாஇந்தமரத்துலஎல்லாம்ஏறுவார்உங்களால்முடியுமாஎன்றுகேட்டுஇருக்கிறார்? இதைகேட்டதும்சிவாஜிவாய்அடைத்துப்போய்ஆமாம்இந்தவேலைஎல்லாம்உங்கஅப்பன்தான்பண்ணுவான்என்றுகூறியிருக்கிறாராம். இதனைநேர்க்காணலில்நெகிழ்வுடன்கமல்ஹாசகூறிசிரித்தாராம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.