Advertisment

சாந்தனு ஹசாரிகாவுடன் ‘பிரேக்அப்...’; உறுதிப்படுத்திய ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடனான பிரிவை உறுதிப்படுத்தியுள்ளார். “நான் முற்றிலும் தனிமையில் இருக்கிறேன், என் வாழ்க்கையை அனுபவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Shruti Santhanu

நடிகை ஸ்ருதி ஹாசன்  சாந்தனு ஹசாரிகாவுடனான பிரிவை உறுதிப்படுத்தியுள்ளார்.  (Photo: Instagram/Shruti Haasan)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை ஸ்ருதி ஹாசனும், அவரது நீண்டநாள் காதலர் சாந்தனு ஹசாரிகாவும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன்  சாந்தனு ஹசாரிகாவுடனான பிரிவை உறுதிப்படுத்தியுள்ளார்.  “நான் முற்றிலும் தனிமையில் இருக்கிறேன், என் வாழ்க்கையை அனுபவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கேள்விக்கு வியாழக்கிழமை பதிலளித்தார்,  “இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால், நான் முற்றிலும் தனிமையில் இருக்கிறேன். நான் ஒன்றுசேரத் தயாராக இல்லை, வேலை செய்கிறேன், என் வாழ்க்கையை அனுபவிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

இதனிடையே, நடிகை ஸ்ருதி ஹாசன், சாந்தனுவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இது உறுதியான முறிவைக் குறிக்கிறது. அவர் சமீபத்தில் ஒரு ரகசிய பதிவை வெளியிட்டு, அவரது உணர்ச்சிகரமான மனநிலையை சுட்டிக்காட்டினார். அந்த பதிவில், “இது ஒரு பைத்தியக்காரத்தனமான பயணம், என்னைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன். நாம் இருக்கக்கூடிய அல்லது இருக்க வேண்டிய எல்லாவற்றிற்கும் நாம் ஒருபோதும் வருந்தக்கூடாது.” என்று பதிவிட்டார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் பாம்பே டைம்ஸ் உடனான உரையாடலில், சாந்தனுவுடனான தனது உறவைப் பற்றி மனம் திறந்து பேசினார். “சாந்தனுவுக்கும் எனக்கும் சில பொதுவான நண்பர்கள் இருந்தனர். கலை, இசை, சினிமா ஆகியவற்றில் பரஸ்பரம் பாராட்டியதால் எங்கள் நட்பு மலர்ந்தது. இவரைப் போன்றவர்கள் அரிது. அவர் மிகவும் கனிவானவர் மற்றும் திறமையானவர். ஒரு காட்சி கலைஞராகவும், இல்லஸ்ட்ரேட்டராகவும், அவரது கலை உண்மையில் என்னை ஊக்குவிக்கிறது.” என்று கூறினார்.

மேலும் , “குறிப்பாக எங்கள் வேலையில், அன்பு மற்றும் நல்ல நடத்தைக்கு முன்னுரிமை கொடுக்காத பலரை நான் சந்தித்திருக்கிறேன், நான் இதற்கு முன்பு நடிகர்களுடன் டேட்டிங் செய்திருக்கிறேன், அது பயங்கரமானது. சில நடிகர்களுக்கு சரியாக இருக்கலாம், ஆனால், எனக்கு, நான் ஒரு கிரியேட்டிவ் இசைக்கலைஞராக கருதுகிறேன். நான் சினிமா சமூகத்திற்கு வெளியே டேட்டிங் செய்த பிறகுதான் நான் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன்.” என்று கூறினார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் கடைசியாக சலார் படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து அவர், தற்போது 'சலார் பார்ட் 2' படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசனும், அவரது நீண்டநாள் காதலர் சாந்தனு ஹசாரிகாவும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அதை ஸ்ருதி ஹாசன் உறுதிப் படுத்தியிருப்பது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment