கிரேஸித்தனமான டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்: தமிழ் நடிகை என்பதை மறந்துவிட்டாரோ?

Shruti Haasan: தான் தமிழிலும் நடிகை என்பதை மறந்துவிட்டாரா அல்லது நினைவிருந்தும் ஹேஷ்டேக்கில் போடாமல் தவிர்த்து விட்டாரா எனத் தெரியவில்லை. 

Shruti Haasan: தான் தமிழிலும் நடிகை என்பதை மறந்துவிட்டாரா அல்லது நினைவிருந்தும் ஹேஷ்டேக்கில் போடாமல் தவிர்த்து விட்டாரா எனத் தெரியவில்லை. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shruti Haasan Plastic Surgery

Shruti Haasan

Shruti Haasan's Latest Dance Video: சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பு, இசை என பிஸியாகி விட்டார் நடிகை ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் தமன்னா மற்றும் பிரபுதேவா நடித்த திகில் திரைப்படமான ‘காமோஷி’ படத்தின் டைட்டில் ட்ராக்கைப் பாடியிருந்தார். தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் புதுபுது அப்டேட்டுகளை அளித்து எப்போதும் அவர்களையும் பிஸியாக வைத்துக் கொள்வதில் ஸ்ருதி ஹாசன் கைத்தேர்ந்தவர்.

Advertisment

அந்த வகையில் இன்ஸ்டா ஹேண்டிலில் இரண்டு ’த்ரோபேக்’ நடன வீடியோக்களை வெளியிட்ட ஸ்ருதி ஹாஸன் அதில் ஒரு வீடியோவுக்கு ‘மேட் க்ரேஸி’ என கேப்ஷன் வைத்திருந்தார். தவிர ஸ்ருதி ஹாசன், நடிகை, பாலிவுட், டோலிவுட் என்றெல்லாம் ஹேஷ்டேக் போட்ட ஸ்ருதி, தான் தமிழிலும் நடிகை என்பதை மறந்துவிட்டாரா அல்லது நினைவிருந்தும் ஹேஷ்டேக்கில் போடாமல் தவிர்த்து விட்டாரா எனத் தெரியவில்லை.

Advertisment
Advertisements

சமீபத்தில், ஸ்ருதியும் அவரது பாய் ஃபிரெண்ட் மைக்கேல் கோர்சலும் பல வருடமாக நீடித்த தங்களது உறவை முடித்துக் கொண்டனர். நீண்ட தூர உறவை முறித்துக் கொண்டதற்காக கோர்சலே குற்றம் சாட்டப்பட்டார், அதோடு அது குறித்த செய்தியை சமூக வலைதளங்களிலும் அவர் பகிர்ந்துக் கொண்டார்.

பிரிவுக்குப் பிறகு ஸ்ருதியைப் பற்றி ரசிகர்கள் கவலைப்பட்டாலும்,  ஒருபோதும் தான் கவலையோடும், மன அழுத்தத்தோடும் காட்சியளிக்காமல் உற்சாகமான படங்களை ஸ்ருதி தொடர்ந்து பகிர்ந்துகொள்வதால், அதை லைக் செய்து தங்களின் ஆதரவை இந்த பன்முகத் திறமைக் கொண்ட நடிகைக்கு தொடர்ந்து அளித்து வருகிறார்கள்.

Shruti Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: