/tamil-ie/media/media_files/uploads/2019/06/shruti-haasan.jpg)
happy birthday shruti haasan
Shruti Haasan: பாடகி, மாடல் மற்றும் நடிகை என தனது தந்தை உலகநாயகன் கமல்ஹாசனைப் போலவே பன்முகத் திறமைகளை தன்னுள் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் லண்டன் மேடை நடிகர் மைக்கேல் கோர்சலேவுடன் இரண்டு ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதோடு கமலுடன் சேர்த்து ஜோடியாக ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்கள். இந்தாண்டின் தொடக்கத்தில் இவர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/Shruti-Haasan-Michael-Corsale-broke-up.jpg)
இந்நிலையில், லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கும் "ஃபீட் அப் வித் ஸ்டார்ஸ்" என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் ஷ்ருதி ஹாசன். அப்போது மைக்கேல் கோர்சலேவுடன் பிரிந்ததைப் பற்றி அவர் மனம் திறந்துள்ளார்.
"நான் கூல் டைப். அதோடு மிகவும் இன்னசெண்டும் கூட, என்னைச் சுற்றியிருந்தவர்கள் பாஸியாக இருந்தார்கள். என்று விளக்கும் எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார். நான் மிகவும் உணர்ச்சி வசப்படுபவள், அதனால் இதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க முடியும். இது எனக்கு ஒரு நல்ல அனுபவம், என்று மட்டும் கூற முடியும். நல்லவர்கள் நல்ல நேரங்களில் நல்லவர்கள், அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்களாகி விடுகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/shruti-haasan-2.jpg)
ஆனால் இப்போது என்னிடம் எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் நிறைய கற்றுக்கொண்டேன், அது ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. ஆனால் நான் எப்போதும் அந்த ஒரு சிறந்த அன்பை எதிர்பார்க்கிறேன், இதற்காகத் தான் நான் காத்திருந்தேன் என்று அறிவிக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன்” என்றார்.
தவிர, தற்போது இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் இயக்கி வரும் ‘லாபம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.