Shruti Haasan's Latest Images : தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகை ஸ்ருதிஹாசன், திறமைகளின் களஞ்சியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அனைத்துத் திரையுலகிலும் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர், நல்ல இசை ஞானமும், குரல் வளமும் கொண்டவர். ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி, அதன் மூலம் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ஷ்ருதி.
Advertisment
லண்டனைச் சேர்ந்த தியேட்டர் கலைஞர் மைக்கேல் கார்சேலும் ஸ்ருதியும் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சென்னை, மும்பை மற்றும் லண்டனில் ஜோடியாக வலம் வந்தனர். இதனால் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார் ஸ்ருதி. இதற்கிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு ஸ்ருதியும், மைக்கேலும் பிரிந்து விட்டனர்.
ஷ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
Advertisment
Advertisements
ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட காதல் முறிவிற்குப் பிறகு, நடிப்பு, இசை என முழு வீச்சில் இறங்கி விட்டார் ஸ்ருதி. வெளிநாடுகளில் அடிக்கடி தனது இசை நிகழ்ச்சியை நடத்தி வரும் அவர், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.