Advertisment

'சமந்தா, காஜல்' வழியை பின்பற்றும் ஸ்ருதி ஹாசன்!

பிரேக் அப்பிற்குப் பிறகு மீண்டும் தனது கரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shruti Haasan

நடிகை ஸ்ருதி ஹாசனும் லண்டனைச் சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட் மைக்கேல் கோர்சலேவும் 3 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்தனர்.

Advertisment

லண்டன், மும்பை, சென்னை என இவர்கள் வலம் வரும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்ட செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ருதி, பிரேக் அப்பிற்குப் பிறகு மீண்டும் தனது கரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால் ரூட்டைப் பின்பற்றுகிறார் ஸ்ருதி. எதில் என்று கேட்கிறீர்களா? பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அவர், தனது புகைப்படங்களை இணையத்தில் உலவ விட்டு வருகிறார்.

மைக்கேலுடன் காதலில் இருந்த போது இதிலெல்லாம் இண்ட்ரெஸ்ட் காட்டாமல் இருந்த ஸ்ருதி, தற்போது புகைப்படங்களை ஷேர் செய்வதில் மும்முரம் காட்டி வருகிறார்.

Shruti Haasan Kajal Agarwal Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment