Shruti Haasan Concert: தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், திறமைகளின் களஞ்சியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த அழகு நடிகை டோலிவுட்டில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். அதோடு, நல்ல இசை ஞானமும், குரல் வளமும் கொண்டவர். ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி, அதன் மூலம் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ஷ்ருதி.
தற்போது தனது நண்பர்களுடன் லண்டனில் ஜாலியாக நேரத்தை செலவிட்டு வருகிறார். ஸ்ருதி ஹாசன் விரைவில் லண்டனில் மிகவும் பிரபலமான இடம் ஒன்றில் தனது இசைக்குழுவின் உறுப்பினர்களுடன் இணைந்து ஓர் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தவுள்ளார். சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார் ஷ்ருதி. அதில், பிரபலமான கச்சேரி அரங்கங்கத்தின் வெளியே இருக்கும் காட்சி பலகையில் தன் பெயர் இடம் பெற்றிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியுடன் நடனமாடுவதைக் காண முடிகிறது. தவிர, சமீபமாக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ஸ்ருதி, அடிக்கடி நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்.
Advertisment
Advertisements
இதற்கிடையே, யூ.எஸ்.ஏ நெட்வொர்க்கின் ‘ட்ரெட்ஸ்டோன்’ சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ஸ்ருதி, டெல்லியைச் சேர்ந்த நிரா படேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத் தக்கது.