ஸ்ருதி ஹாசனின் ‘லண்டன்’ உற்சாகம்: இசை... வெப் சீரிஸ்... பாசிட்டிவ் எனர்ஜி!

Shruti Haasan: இசைக்குத் திரும்பியதாகட்டும், சர்வதேச தொடரில் நடிப்பதாகட்டும், இசை மற்றும் நடிப்பு இரண்டுமே அற்புதமாக உள்ளது.

Shruti Haasan: இசைக்குத் திரும்பியதாகட்டும், சர்வதேச தொடரில் நடிப்பதாகட்டும், இசை மற்றும் நடிப்பு இரண்டுமே அற்புதமாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shruti Haasan London Concert

Shruti Haasan

Shruti Haasan: நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனது இசை நிகழ்ச்சியை லண்டனில் சிறப்பாக அரங்கேற்றியுள்ளார். இஸ்லிங்டனில் அற்புதமான நேரத்தையும், நிகழ்ச்சியையும் என்ஜாய் பண்ணியதாக இது பற்றி குறிப்பிடுகிறார் ஸ்ருதி.

Advertisment

தொடர்ந்த ஸ்ருதி, ”இஸ்லிங்டனில் நான் பெர்ஃபார்ம் செய்த இரண்டாவது நிகழ்ச்சி இது. எப்போதும் போல் அற்புதமான நேரத்தை நான் இங்கு கழித்தேன். இந்த இடம் நிறைய பாஸிட்டிவ் எனர்ஜியையும், வரலாற்றையும் கொண்டுள்ளது. மேலும் எனது பெர்ஃபார்மென்ஸைப் பார்க்க மீண்டும் வருகை தந்த மக்களுக்கு நான் எப்போதும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

இண்டர்நேஷனல் வெப் சிரீஸ் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் ஸ்ருதி ஹாசன், அந்தத் தொடருக்கான படப்பிடிப்பை புதாபெஸ்டில் முடித்துள்ளார்.  இதற்கிடையே தான் நடித்துக் கொண்டிருக்கும் தமிழ் படமான ’லாபம்’ படப்பிடிப்பிற்காக விரைவில் இந்தியா திரும்ப இருக்கிறார்.

Advertisment
Advertisements

”எனது வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இசைக்குத் திரும்பியதாகட்டும், சர்வதேச தொடரில் நடிப்பதாகட்டும், இசை மற்றும் நடிப்பு இரண்டுமே அற்புதமாக உள்ளது. தவிர, இப்படி தனித்தனியான உலகங்களுக்கிடையில் பயணிப்பதையும் நான் மிகவும் விரும்புகிறேன்” என்கிறார் உற்சாகமாக.

தனது லண்டன் ஆண் நண்பர் மைக்கேல் கோர்சலேவுடன் ஏற்பட்ட பிரேக் அப்பிற்குப் பிறகு, மீண்டும் தனது கரியரில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் ஸ்ருதி..!

Shruti Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: