Advertisment
Presenting Partner
Desktop GIF

கமல்ஹாசன் - சரிகாவுடன் குழந்தை ஸ்ருதி ஹாசன்; இணையத்தைக் கலக்கும் வைரல் போட்டோ!

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது கடந்த காலத்தின் மனதைத் தொடும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Shruti Haasan child

ஸ்ருதி ஹாசன் தனது பெற்றோர் கமல்ஹாசன் மற்றும் சரிகாவுடன் உள்ள அரிய குழந்தை பருவ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது கடந்த காலத்தின் மனதைத் தொடும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். ஸ்ருதி ஹாசன் தனது பெற்றோர் கமல்ஹாசன் மற்றும் சரிகாவுடன் உள்ள அரிய குழந்தை பருவ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த மலரும் நினைவுகளைக் கொண்டுவரும் இந்த படம் கமல்ஹாசன் - சரிகா பிரிவதற்கு முன், மகிழ்ச்சியாக குடும்பமாக இருந்த தருணத்தைக் காட்டுகிறது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Shruti Haasan shares heartwarming childhood photo with parents Kamal Haasan and Sarika

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பழைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், குழந்தையாக இருக்கும் ஸ்ருதி ஹாசனை, அவருடைய தந்தையும் நடிகரும் ம.நீ.ம தலைவருமான கமல்ஹாசன் கைகளி தூக்கி வைத்திருக்கிறார். அருகில் கமல்ஹாசனின் மனைவி சரிகா நிற்கிறார். இந்த புகைப்படம் குறித்து ஸ்ருதி ஹாசன் குறிப்பிடுகையில், “இதை நான் என் அப்பாவின் அறையில் பார்த்தேன். அது அசல் போல தெரிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படம் கமலின் சொந்த கிராமமான பரமக்குடியில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

நடிகர் கமல்ஹாசன், சரிகாவுக்கு முன் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். வாணியை திருமணம் செய்த பின்னர், சரிகாவை காதலித்தார். வாணியை விவாகரத்து செய்த பிறகு, 1988-ல் சரிகாவை திருமணம் செய்துகொண்டார். கமல்ஹாசன் - சரிகா தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருப்பினும், 2004-ல் இருவரும் பிரிந்ததால், சரிகாவுடனான திருமணமும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

கமல்ஹாசன் 2000-ம் ஆண்டு அளித்த ஒரு நேர்காணலில், தான் திருமண அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று ஒப்புக்கொண்டார். “அந்த நேரத்தில் நான் திருமணம் என்ற அமைப்பின் மீது வேகமாக நம்பிக்கை இழந்து கொண்டிருந்தேன். நான் எப்பொழுதும் சத்தமாகப் பேசினேன், மக்களுக்கு அதிர்ச்சி அடைந்தார்கள். நான் வேண்டாம் என்று திருமணம் ஆன முதல் நாளே சொன்னேன்” என்று கூறினார்.

இருப்பினும், கமல்ஹாசனும் சரிகாவும் தங்கள் மகள்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளாக இருக்கிறார்கள். ஸ்ருதி ஹாசன் குறிப்பாக, தனது பெற்றோரின் வழியைப் பின்பற்றி, திறமையான நடிகையாகவும் பாடகியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மறுபுறம், இயக்கத்தில் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய அக்ஷரா ஹாசன், உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும், நடிப்பிலும் முயற்சி செய்துள்ளார்.

தற்போது, ​​ஸ்ருதி ஹாசன் சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா, பிரபாஸின் சலார் பார்ட் 2 மற்றும் சென்னை ஸ்டோரி உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கிறார். மறுபுறம், கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தை ஜூலை 12-ல் வெளியிடக் காத்திருக்கிறார். கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shruti Haasan Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment