Shruti Haasan: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கத்தில் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்களைப் பொறுத்தவரை, படபிடிப்பு இல்லாத இந்த நாட்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, யோகா, ஒர்க் அவுட், சமையல் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதோடு தங்களது பழைய படங்களையும் இணையத்தில் பகிர்ந்து, வைரலாக்குகிறார்கள்.
இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன், தண்ணீருக்கு அடியில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில், கேமராவுக்கு போஸ் கொடுக்கும் ஸ்ருதி, சிவப்பு நிற ஆடை மற்றும் ஸ்டேட்மென்ட் வளையல்களை அணிந்திருப்பதைக் காணலாம். “வாட்டர் பேபி” என தலைப்பிட்டு, த்ரோபேக் என்ற ஹேஷ்டேக்கில் அதனைப் பதிவிட்டுள்ளார். மற்றொரு படத்தில், அவரை வேறு போஸில் காணலாம். “நான் எங்கும் செல்ல முடியும்” என்று அந்தப் படத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதி. தவிர தனது ‘அண்டர் வாட்டர்’ ஃபோட்டோஷூட்டிலிருந்து சில மோனோக்ரோம் படங்களையும் ஸ்ருதி வெளியிட்டுள்ளார்.
ஸ்ருதி ஹாசன் கடைசியாக பிரியங்கா பானர்ஜியின் ’தேவி’ என்ற குறும்படத்தில் நடித்தார். அதில் அவர் கஜோல், நீனா குல்கர்னி, நேஹா துபியா மற்றும் பலருடன் திரையைப் பகிர்ந்து கொண்டார். தெலுங்கு அதிரடி திரில்லர் படமான ’க்ராக்’, தமிழில் ’லாபம்’ ஆகியப்படங்கள் தற்போது ஸ்ருதி ஹாசனின் கைவசம் உள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”