Advertisment

விஜய் வில்லனுடன் ரொமான்ஸ்: ஓடிடி-யில் வெளியாகும் ஸ்ருதி ஹாசன் படம்!

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் நடிப்பு, இசை என பிஸியாக இயங்கி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yaara movie release, shruti haasan

’யாரா’ ஆன்லைன் ரிலீஸ்

சூர்யா நடிப்பில் வெளியான ‘7ஆம் அறிவு' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷ்ருதி ஹாசன். உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் நடிப்பு, இசை என பிஸியாக இயங்கி வருகிறார். தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ’லாபம்’ படத்தில் அவர் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் இவர். அதோடு ஆங்கில இணைய தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் பிரபல நடிகர் வித்யூத் ஜாம்வாலுடன் (துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர்) ’யாரா’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி. திக்மன்ஷு துலியா என்பவர் இயக்கியுள்ள இந்த படம்,  ஜூலை மாதம் 30-ம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இதற்கிடையே அவர் திரையுலகில் கால்பதித்த 11-ம் ஆண்டை நேற்று ரசிகர்கள் கொண்டாடினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment