/indian-express-tamil/media/media_files/2025/07/23/actor-harish-2025-07-23-09-33-37.jpg)
'சிறகடிக்க ஆசை' தொடரில் அருண் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஹரிஷ் நடித்து வருகிறார். இந்த தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு எவ்வாறு அமைந்தது என்றும், தனது குடும்பத்தினர் தனக்கு எந்த அளவிற்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்றும் பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் டெலி விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில் இடம்பெற்ற சில சுவாரஸ்ய குறிப்புகளை இதில் காணலாம்.
அதன்படி, "என் குடும்பத்தினர் பல சூழலில் உறுதுணையாக இருந்தனர். ஆனால், விஸ்காம் (Viscom) படிப்பில் சேர்ந்த போது, அவ்வளவாக என் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். சினிமா மீது கொண்ட ஆசை காரணமாக விஸ்காம் படிக்கவில்லை. அனிமேஷன், டிஸைனிங் ஆகியவற்றில் இருந்த ஆர்வத்தினால் விஸ்காம் சேர்ந்தேன். அப்போது, சில குறும்படங்களில் வேலை பார்த்தேன்.
கல்லூரி படிப்பை முடித்த பின்னர், பொருளாதார ரீதியாக குடும்பத்திற்கு பங்களிக்க எதிர்பார்த்தனர். அதனால், வேறு ஒரு வேலை பார்த்துக் கொண்டே, இதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். எனது சூழ்நிலையை புரிந்து கொண்டு, என் குடும்பத்தினர் சப்போர்ட் செய்தனர். மேலும், திருமணத்திற்கு பின்னர், என் மனைவியும் எனக்கு துணையாக இருந்தார்.
எனக்கு குழந்தை பிறந்து சுமார் ஒன்றரை மாதங்களில் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் கமிட் ஆனேன். என் மனைவி இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வந்தார். அப்போது, சீதா கதாபாத்திரத்திற்கு சீரியலில் மாப்பிளை பார்த்து வருவதாகவும், அதில் நடிக்க என்னை முயற்சி செய்யுமாறும் என் மனைவி அறிவுறுத்தினார்.
அந்த வகையில், யதார்த்தமாக இதன் ஆடிஷனில் கலந்து கொண்டேன். என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையால் என் மனைவியே சில சமயங்களில் திட்டுகிறார். குறிப்பாக, நேரில் மற்றும் திரையில் என இரண்டிலும் சரியாக ரொமான்ஸ் செய்ய வரவில்லை என்று என் மனைவி கூறினார்.
ரொமான்ஸ் காட்சியில் கூட நான் சிரிக்கவில்லை என்று என் மனைவி தெரிவித்தார். ஒவ்வொரு எபிசோட் முடிந்த பின்னரும், தனது விமர்சனத்தை கூறும் வழக்கத்தை அவர் கடைபிடிப்பார்" என நடிகர் ஹரிஷ் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.