Sibi Sathyaraj's clever response on Insurance policy SMS : நமக்கு இந்த உலகிலேயே அதிக எரிச்சலை ஏற்படுத்த கூடிய விசயம் ஒன்று இருக்கிறது என்றால் அது மிகவும் பிஸியாக இருக்கின்ற நேரம் பார்த்து வரும் வங்கி அழைப்புகள். லோன் வாங்கிக்கீறீங்களா என்பார்கள் அல்லது இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் இருந்து அழைத்து “ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால்” என்பார்கள். அட என்னடா இதுன்னு டி.என்.டி.ஐ நாம் உடனே ஆக்டிவேட் செய்ய வேண்டிய நிலைமைக்கே தள்ளப்படுவோம்.
டேட்டா இருந்தால் போதும் உடனே தொடர்ச்சியாக மெயில்களுக்கும் போன் நம்பர்களுக்கும் ஏதாவது ஒரு மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். இதனை எந்த வகையிலும் பொருத்துக் கொள்ளவே முடியாது. இது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லை. பிரபலங்களுக்கும் பொருந்தும். நடிகர் சிபிராஜ்க்கும் இபப்டித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேக்ஸ் லைஃப் இன்ஸ்யூரன்ஸில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு மெசேஜை பார்த்து மனுசன் கதி கலங்கி போய்ட்டாரு.
தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்காக பாலிசி எடுக்க சொன்னால் பரவாயில்லை. ஆனால் யாரோ இமிதியாஸ் என்பவரின் குடும்பத்திற்காக 50 லட்சம் ரூபாய்க்கு இன்ஸ்யூரன்ஸ் பாலிசி போட்டுக் கொள்ளுங்கள் என்று மெசேஜ் வந்துள்ளது. இதனை பார்த்த சிபி, தற்போது இமிதியாஸின் குடும்பத்தையும் நானே கவனித்து கொள்ள வேண்டுமா என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதற்கு மேக்ஸ் நிறுவனம் ரெஸ்பான்ஸ் செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil