மனிதர்கள் பெரும்பாலும் சமவெளிகளில் வாழ்பவர்களாகவும் நகரங்களில் வாழ்பவர்களாகவும் மாறிவிட்டிருந்தாலும், காடுகளின் மீதான அவர்களின் ஆர்வம் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், காடுகளையும் வனவிலங்குகளையும் எப்படி அணுக வேண்டும் என்பதைத்தான் மறந்து போயிவிட்டிருக்கிறார்கள். அதனால்தான், வனவிலங்குகள் மனிதர்கள் மோதல் நிகழ்வுகள் நடக்கின்றன.
காடுகளைப் பற்றியும் வனவிலங்குகளைப் பற்றியும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டும், விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், வனவிலங்குகள் மீது ஆர்வமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், காணுயிர் ஆர்வலர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் யானைகள் பொய்யாக சண்டையிடுவதையும் சமூக வாழ்க்கை வாழும் யானைகள் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்ததுமே ஏதோ யானைகளுக்கு இடையே ஏதோ பயங்கர சண்டை என்று பார்த்தால், அப்படியெல்லாம் இல்லை, இது சகோதர யானைகளுக்கு இடையே நடக்கும் வேடிக்கையான சும்மா ஒரு பொய் சண்டை. இந்த சண்டையைப் பார்த்த தாய் யானை சண்டையை நிறுத்துகிறது. சகோதர யானைகளின் இந்த அழகான பொய் சண்டை வீடியோ பார்ப்பவர்களின் மனதை லேசாக்கி விடுகிறது.
இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு குறிப்பிடுகையில், “சகோதரர்களுக்கிடையே நடக்கும் பொய்ச் சண்டை, பிறகு கடுப்பான அம்மா இந்த வேடிக்கையை நிறுத்துகிறது. யானைகள் நமது பூமியின் ரத்தினங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
பூமியில் நிலத்தில் வசிக்கும் பெரிய விலங்கான யானையை யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் இந்த வீடியோவில் யானைகள் மனதை கொள்ளைகொள்கின்றன. இந்த அழகான வீடியோவை நீங்களே பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“