ஜீ தமிழில் களமிறங்கும் சிபு சூர்யன்; புதிய சீரியல் பெயர் இதுதான்; ஹீரோயின் யார் தெரியுமா?

சீரியலை முடிவுக்கு கொண்டு வந்த விஜய் டிவி; ஜீ தமிழ் சீரியலுக்கு மாறிய சிபு சூர்யன்; ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை

சீரியலை முடிவுக்கு கொண்டு வந்த விஜய் டிவி; ஜீ தமிழ் சீரியலுக்கு மாறிய சிபு சூர்யன்; ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை

author-image
WebDesk
New Update
ரோஜா அர்ஜுனுக்கு என்ன ஆச்சு?

சீரியலை முடிவுக்கு கொண்டு வந்த விஜய் டிவி; ஜீ தமிழ் சீரியலுக்கு மாறிய சிபு சூர்யன்; ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா 2 சீரியல் கடந்த ஆண்டு அவசரமாக முடிவடைந்த நிலையில், அதில் ஹீரோவாக நடித்த சிபு சூர்யன் நடிக்கும் புதிய சீரியல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Advertisment

சன் டிவியில் 4 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல். பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூரியன் மற்றும் ஹீரோயினாக பிரியங்கா நல்கரி நடித்திருந்தனர். டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் முன்னிலையில் இருந்து வந்த இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து, இந்த சீரியல் ஹீரோவான சிபு சூரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடித்தார்.

முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில், பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகம் டி.ஆர்.பி.,யில் சரிவை சந்தித்தது. எனவே, புதிய சீரியலான கிழக்கு வாசல் தொடரை ஒளிபரப்ப, அதிரடியாக பாரதி கண்ணம்மா 2 கதையை முடித்தனர்.

Advertisment
Advertisements

இந்தநிலையில், விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலுக்கு மாறியுள்ளார் சிபு சூரியன். இவர் புதிதாக நடிக்கும் சீரியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ்' என்கிற பெயரில் உருவாகும் இந்த சீரியல், 3 அண்ணன் தம்பிகளின் கதையை மையமாக கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சீரியலில், சீரியல் நடிகை வைஷ்ணவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஜீ தமிழில் 2021 முதல் 2023 வரை ஒளிபரப்பாகி வந்த 'பேரன்பு' தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலின் நேரம் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Zee Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: